search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suraj Venjaramoodu"

    • நடிகர் விக்ரம் ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு ‘வீர தீர சூரன்’ என பெயரிடப்பட்டுள்ளது
    • இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்

    நடிகர் விக்ரம் 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு 'வீர தீர சூரன்' என பெயரிடப்பட்டுள்ளது.

    விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

    விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திற்கான சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் நம் கவனத்தை கவர்கிறது. படத்தின் டைட்டிலில் இரண்டாம் பாகம் என குறிப்பிடப்படுகிறது. இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.

     

    இந்நிலையில் வீர தீர் சூரன் என்ற தலைப்பில் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான போஸ்டரை படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதனிடையே விக்ரம் படத்திற்கும் இதே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
    • விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சூரஜ் வெஞ்சரமூடு. மலையாள திரைப்பட நடிகரான இவர் தேசிய விருது பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரஜ் ஓட்டிச்சென்ற கார் மோதி, மஞ்சேரியை சேர்ந்த சரத்(வயது31) என்ற வாலிபர் காயமடைந்தார். இதுகுறித்து நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது வழக்கு பதியப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை மோட்டார் வாகன துறைக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆகவே அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மோட்டார் வாகன துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    ×