அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் விபத்து- கேரள நடிகரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் விபத்து- கேரள நடிகரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சூரஜ் வெஞ்சரமூடு. மலையாள திரைப்பட நடிகரான இவர் தேசிய விருது பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரஜ் ஓட்டிச்சென்ற கார் மோதி, மஞ்சேரியை சேர்ந்த சரத்(வயது31) என்ற வாலிபர் காயமடைந்தார். இதுகுறித்து நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

அவர் மீது வழக்கு பதியப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை மோட்டார் வாகன துறைக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆகவே அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மோட்டார் வாகன துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com