என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veera Dheera Sooran"

    • இயக்குநரின் ஸ்கிரிப்ட் விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளது.
    • சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான். அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். ரசிகர்களால் அன்போடு 'சியான்' என்று அழைக்கப்படுகிறார்.

    படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது.

    இதனிடையே, 'வீர தீர சூரன்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் புது படம் தொடர்பான தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு அறிமுக இயக்குநருடன் இணைந்து விக்ரம் பணியாற்ற உள்ளதாகவும் இயக்குநரின் ஸ்கிரிப்ட் விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

    • திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன
    • சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    'வீர தீர சூரன் 2'

    சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மதுரையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இப்படம் இன்று (24-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'எல் 2 எம்புரான்'

    மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'எல் 2 எம்புரான்'. இந்த படத்தில் மோகன் லால் ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'நிறம் மாறும் உலகில்'

    அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதி ராஜா நடிப்பில் வெளியான படம் 'நிறம் மாறும் உலகில்'. இந்த படத்தில் நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'மேட் ஸ்கொயர்'

    கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'மேட் ஸ்கொயர்'. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்தில் நர்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகைச்சுவை கதையில் உருவாகியுள்ள இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

    'தி ரிட்டன்'

    தி ரிட்டர்ன் என்பது உபெர்டோ பசோலினி இயக்கிய திரில்லர் திரைப்படமாகும். இதில் ரால்ப் பியன்னெஸ் மற்றும் ஜூலியட் பினோச் நடித்துள்ளனர். போரை பற்றிய கதையில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 21-ந் தேதி பாராமவுண்ட் பிளஸ் என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    தருணம்

    கிஷன் தாஸ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் கடந்த மாதன் வெளியானது தருணம் திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநரான அர்விந்த் ஸ்ரீனிவாசன் இயக்கினார். இப்படம் ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதைக்களமாக உருவானது. இப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    யூ

    நெட்பிளிக்ஸ்-இல் அனைவரும் எதிர்ப்பார்த்த யூ-வின் கடைசி சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இத்தொடரில் பென் பேட்க்லே, சார்லட் ரிச்சி, மேடலின் ப்ரூவர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    புல்லட் டிரெயின் எக்ஸ்ப்லோஷன்

    டொக்யோவில் உள்ள புல்லட் டிரெயின் 100 கிலோமீட்டர் வேகத்துக்கு கீழ் சென்றால் வெடித்துவிடும் என்ற சூழ்நிலையில் கதைக்களம் உருவாகியுள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    அதனை தொடர்ந்து 25-ந் தேதி (நாளை) 'ஹவாக், ஜுவல் தீப், பாமா கலாபம், ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. 

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்தார்
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் சீயான் விக்ரம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது. நீண்ட நாள் பிறகு ஒரு பக்கா சீயான் ஸ்டைலில் ஒரு கமெர்ஷியல் திரைப்படம் பார்த்த மன நிம்மதி ரசிகர்களுக்கு கிடைத்தது.

    இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் எஸ்.ஜே சூர்யா யாரை எப்படி என்கவுண்டர் செய்ய வேண்டும் என சக அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருக்கும் காட்சியமைந்துள்ளது.

    • மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.

    'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.

    இந்த நிலையில், 'வீர தீர சூரன் பாகம்-2' வெளியாகி 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.

    திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் உலகளவில் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர். திரைப்படம் இந்த வார இறுதியில் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் படத்தை இந்தளவு வெற்றி திரைப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து விக்ரம் வீடியோ ஒன்றை பதிவுசெய்துள்ளார். அதில் "இப்படம் வெளியாக இருந்த சிக்கல்கள் உங்களுக்கே தெரியும். எனது ரசிகர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன் அப்படி ஒரு திரைப்படமாக இது அமைந்தது. படத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்." என கூறியுள்ளார்.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.

    திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் 37 கோடி ரூபாயை வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது திரைப்படம் உலகளவில் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரைப்படம் இந்த வார இறுதியில் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் படத்தில் இடம் பெற்று ஹிட்டான கல்லூரம் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.

    திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் 37 கோடி ரூபாயை வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது திரைப்படம் உலகளவில் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரைப்படம் இந்த வார இறுதியில் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.

    திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் 37 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனர் அருண்குமார் பங்கேற்றார். அப்பொழுது திரையரங்கில் மொபைல் யூஸ் செய்வர்களைப் பற்றிய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் " திரையரங்கில் மொபைலை எடுத்து ஃபோட்டோ எடுப்பவரை பார்த்தால் கோவமாக வரும். "திரையரங்கில் படம் ஆரம்பித்த பிறகு, படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது, ஸ்டேடஸ் வைப்பது, இடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, படம் ஆரம்பித்த பிறகு டார்ச் அடித்துக் கொண்டு சீட்டை தேடுவது போன்ற செயல்கள் அதிருப்தி அளிக்கிறது. மக்கள் படத்தை உன்னிப்பாக கவனித்தால்தான் கதையோட்டம் புரியும், இதுபோன்ற இடையூறுகள் காட்சிகளின் ரசனையை குறைக்கும்" என தெரிவித்துள்ளார்.

    • ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்த நிலையில், 'வீர தீர சூரன் பாகம்-2' வெளியாகி 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ.37 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.

    திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    திரைப்படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. நாளுக்கு நாள் முன்பதிவுகள் அதிகரித்து வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் தமிழ்நடு முழுக்க உள்ள திரையரங்களுக்கு படக்குழு நேரில் சென்று படத்தின் ஆதரவை பார்க்கின்றனர்.

    இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியான நிலையில் முதல் பாகமும் மூன்றாம் பாகமும் கண்டிப்பாக எடுப்போம் என சீயான் விக்ரம் சமீபத்தில் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    • விளம்ரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இயக்குநர் அருண் குமார் மற்றும் நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விக்ரம் வீர தீர சூரன் படத்தை விளம்ரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    தமிழ்நாடு முழுக்க பல்வேறு திரையரங்குகளுக்கு சென்ற நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது நடிகர் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்தனர்.

    வீர தீர சூரன் படத்தை விளம்பரப்படுத்தும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ரசிகர்கள் விக்ரம் மற்றும் துஷாரா விஜயனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    ×