`வீர தீர சூரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்தார்இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
`வீர தீர சூரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
Published on

'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் சீயான் விக்ரம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது. நீண்ட நாள் பிறகு ஒரு பக்கா சீயான் ஸ்டைலில் ஒரு கமெர்ஷியல் திரைப்படம் பார்த்த மன நிம்மதி ரசிகர்களுக்கு கிடைத்தது.

இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com