`வீர தீர சூரன்' திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார்.இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
`வீர தீர சூரன்' திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு
Published on

'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் எஸ்.ஜே சூர்யா யாரை எப்படி என்கவுண்டர் செய்ய வேண்டும் என சக அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருக்கும் காட்சியமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com