என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வீர தீர சூரன் பாகம்-2... 9 நாள் வசூல் நிலவரம்!
    X

    மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வீர தீர சூரன் பாகம்-2... 9 நாள் வசூல் நிலவரம்!

    • மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.

    'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.

    இந்த நிலையில், 'வீர தீர சூரன் பாகம்-2' வெளியாகி 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×