search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்ரம்"

    விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சூர்யாவின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதுகுறித்த சூர்யா டுவிட்டர் பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    விக்ரம் படம் திரைப்படம் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், மலேசியா எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்மை, கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.
    மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசனால் ஈர்க்கப்பட்டு சினிமாத்துறைக்குள் வந்த லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை இயக்கியுள்ளார். 

    பான் இந்தியா திரைப்படமான ‘விக்ரம்’ ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கமல்ஹாசன் காதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ‘விக்ரம்’ படத்திற்கான புரமோஷனுக்காக கமல்ஹாசன் பல இடங்களுக்கு பறந்து கொண்டிருக்கிறார். அதன்படி, மலேசியாவிற்கு புரமோஷனுக்காக சென்ற கமல், மலேசியா எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியுள்ளார். கமலை சந்தித்தது குறித்து மலேசியா எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    மலேசிய எதிர்க்கட்சி தலைவருடன் கமல்
    மலேசிய எதிர்க்கட்சி தலைவருடன் கமல்

    அந்த பதிவில், “ சூப்பர் ஸ்டார் கமல்ஹாசனை நான் சந்தித்தேன். எங்கள் இருவருக்குள்ளும் இந்திய வரலாறு மற்றும் நல்லாட்சி குறித்து நீளமான விவாதம் நடந்தது. மலேசியா தலைநகரில் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சியில் நான் கலந்து கொள்வேன்” என்று  குறிப்பிட்டுள்ளார். 
    கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கமல் பேசியுள்ளார்.
    கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    'விக்ரம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன் கூறுகையில், “4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக எனது அன்பான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகம் குறித்து லோகேஷ் கனகராஜ் தான் சொல்ல வேண்டும்; அதற்கும் இவர்தான் இயக்குனர் என நான் முடிவு செய்துவிட்டேன்” என தெரிவித்தார். 

    லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன்
    லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன்

    அதன் பிறகு செய்தியாளர் ஒருவர் கமல்ஹாசனிடம் “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியிடுவது திட்டமிட்டதா” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் “சினிமாகாரனாக கலைஞரைப் பற்றிப் பேச ஆயிரம் உள்ளது. இது யதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவு” என தெரிவித்தார். 

    இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கமல், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

    கமல்

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் பேசும் போது, 4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் ரசிகர்கள் 20 ரூபாய் செலவு செய்வார்கள். ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இப்போது நன்றி சொல்ல மாட்டேன். வேற மாதிரி நன்றி சொல்லிக் கொள்கிறேன். நல்ல டீம் எனக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் விக்ரம் வெற்றி படமாக அமையும் என்றார்.
    ×