என் மலர்
சினிமா செய்திகள்

விக்ரமின் 63வது திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியானது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான்.
அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். ரசிகர்களால் அன்போடு 'சியான்' என்று அழைக்கப்படுகிறார்.
படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது.
இதனிடையே, 'வீர தீர சூரன்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் புது படம் தொடர்பான தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு அறிமுக இயக்குநருடன் இணைந்து விக்ரம் பணியாற்ற உள்ளதாகவும் இயக்குநரின் ஸ்கிரிப்ட் விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், சியான் விக்ரமின் 63வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்குகிறார் என்ற புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.






