என் மலர்
சினிமா செய்திகள்

அப்பாவுடன் என்னை ஒப்பிட முடியாது: பைசன் படவிழாவில் மனம் திறந்து பேசிய துருவ் விக்ரம்
- கஷ்டமான காட்சிகள் நடிக்கும்போது சியானை நினைத்துக்கொள்வேன்.
- மாரி செல்வராஜ் 'டேக் ஓகே' என்று சொன்னாலே எனக்கு வாழ்க்கையில ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய துருவ் விக்ரம், "கஷ்டமான காட்சிகள் நடிக்கும்போது சியானை நினைத்துக்கொள்வேன். என் அப்பாவுடன் என்னை ஒப்பிட முடியாது. இருந்தாலும் அவரை போல நடிக்க நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.
பைசன் படத்தைக் கொடுத்ததற்கு என் குரு, இயக்குனர் மாரிசெல்வராஜ் சாருக்கு நன்றி. நான் இப்படத்திற்காக 2-3 வருடங்கள் காத்திருந்தேன் என்று சிலர் கூறுகிறார்கள், இதற்காக நான் 10 வருடங்கள் கூட காத்திருப்பேன். பைசன் படப்பிடிப்பின் போது மாரி செல்வராஜ் 'டேக் ஓகே' என்று சொன்னாலே எனக்கு வாழ்க்கையில ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும். உங்களுடன் மீண்டும் பணியாற்ற நான் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.






