வெப் தொடராக உருவாக இருக்கும் ஏஜெண்ட் டீனா கதாப்பாத்திரம் - லோகேஷ் கொடுத்த அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
வெப் தொடராக உருவாக இருக்கும் ஏஜெண்ட் டீனா கதாப்பாத்திரம் - லோகேஷ் கொடுத்த அப்டேட்
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் எதிர்பாராத இடத்தில் ஏஜெண்ட் டீனா என்ற கதாப்பாத்திரம் வந்து மக்களின் பெரும் வரவவேற்பை பெற்றது. இந்த கதாப்பாத்திரத்தை வைத்து ஒரு தனி இணைய தொடரை உருவாக்க இருக்கிறார் லோகேஷ். ஆனால் இதை அவர் இயக்காமல் அவரது உதவி இயக்குநர் இயக்க இருக்கிறார். இதனால் LCU ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com