புலிக்கு பிறந்தது பூனையாகுமா?... துருவை நினைத்து விக்ரம் பெருமிதம்

தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.தந்தை போலவே மகனும் படத்திற்காக கடின உழைப்பு கொடுத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?... துருவை நினைத்து விக்ரம் பெருமிதம்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான். அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களை நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார்.

படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது.

இந்த நிலையில், தனது மகன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள 'பைசன்' படத்திற்காக துருவ் விக்ரம் தீவிர பயிற்சி மேற்கொண்ட வீடியோவை விக்ரம் பகிர்ந்து பெருமிதம் கொண்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். தந்தை போலவே மகனும் படத்திற்காக கடின உழைப்பு கொடுத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com