எம்புரான் Vs வீர தீர சூரன்: யாருக்கு வெற்றி? - 2 படத்திலும் நடித்த பிரபல நடிகர் பளிச் பதில்!

சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62-வது படமான 'வீர தீர சூரன்' வெளியாகிறது.இரண்டு படங்களிலும் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.
எம்புரான் Vs வீர தீர சூரன்: யாருக்கு வெற்றி? -  2 படத்திலும் நடித்த பிரபல நடிகர் பளிச் பதில்!
Published on

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

அதேநாளில் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62-வது படமான 'வீர தீர சூரன்' வெளியாகிறது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 இந்த இரண்டு படங்களிலும் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய அவர், இரண்டு படங்களுமே சிறந்த படங்கள். ஹிட் அடிக்கும். எம்புரான் ஹிட்டகும்போது அது மோகன்லாலுக்கு ஒரு வெற்றி. வீரதீர சூரன் ஹிட்டாகும் அது விக்ரமூக்கு ஒரு வெற்றி. ஆனால் இரண்டு படங்களிலுமே உள்ளதால் எனக்கு ஒரே நாளில் இரண்டு ஹிட் படங்கள் என்று தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com