டொவினோவின் நரிவேட்டை - ரிலீஸ் தேதி அறிவிப்பு

டொவினோ தாமஸ் அடுத்ததாக நரிவேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
டொவினோவின் நரிவேட்டை - ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வெளியாகும்ம் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியாகும் எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com