என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Lokah Chapter 2 படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டார் துல்கர் சல்மான்
    X

    Lokah Chapter 2 படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டார் துல்கர் சல்மான்

    • லோகா சாஃப்டர் 1 படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
    • லோகா சாஃப்டர் 2 படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா சாப்டர் 1 படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மோகன்லாலின் எம்புரான் பட வசூலை கடந்து மலையாளத்தில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.

    இந்நிலையில், லோகா சாப்டர் 2 படம் தொடர்பான அறிவிப்பு வீடியோவை தயாரிப்பாளர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    Next Story
    ×