என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "international best actor"

    • உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டைச் சுற்றி இயங்கும் தீவிரமான அரசியல் பிரச்சனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட படம்.
    • இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் 'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சாந்தனு பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

    'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் எனக்கு ஒரு கதாபாத்திரத்தை விட அதிகமாக கொடுத்தது. இது எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவுகள், பாடங்கள் மற்றும் அன்பைக் கொடுத்தது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றி பீம்ஜி அண்ணா மற்றும் இயக்குநர், என்னை நம்பியவர்கள், என் சக நடிகர்கள் மிகவும் அன்பானவர்கள்.

    தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவின் ஒவ்வொரு நபருக்கும். மிக முக்கியமாக, எனது பயணத்தை ஆதரித்த எனது அன்பான பார்வையாளர்களுக்கு... இது உங்கள் அனைவருக்கும் நன்றி.. என கூறியுள்ளார்.

    உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டைச் சுற்றி இயங்கும் தீவிரமான அரசியல் பிரச்சனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட 'ப்ளூ ஸ்டார்' படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 



    டொவினோ தாமஸ் நடிப்பில் இந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது.

    டொவினோ தாமஸ் நடிப்பில் இந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பும் லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லோகா 2 படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்நிலையில் டொவினோ தாமஸ் 2025 ஆண்டு செப்டிமியஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.இது அவருக்கு கிடைத்த இரண்டாவது கவுரவ விருதாகும்.

    சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Vijay #Mersal #BestInternationalActorVIJAY
    லண்டன்:

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 

    மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 



    இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ அறிவித்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Mersal #Vijay
    ×