search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்"

    • இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
    • விஜய்யும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா?

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால் எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து கலந்து கொள்வது சம்பந்தமாக தெரிவிக்கப்படும். நடிகர் விஜயும் திராவிட கொள்கையை பின்பற்றுகிறாரா? அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். எனவே விஜய்யும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் பா. மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை.
    • விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது.

    விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என்று வருத்தமாக உள்ளது என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மோகன் ஜி. "நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும், அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக உள்ளது.

    இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னால், அது இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது போல மாறிவிடும். ஏனெனில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது போல, ஒரு தோற்றம் வந்துவிடும் என்பதால், இந்துவாக இருக்கும் பலரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல பயப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது என்பது வேறு, பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது வேறு, இந்த இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனநிலை முதலில் மாற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக்கழத் தலைவர் விஜய் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பெரியார் பிறந்தநாளில் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என இன்று காலை விஜய் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,

    பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

    • மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    • தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள்.

    விக்கிரவாண்டி:

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

    அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இந்த அறிவிப்புக்கு பிறகு கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் தீவிரம் காட்டினார்.

    இதற்காக முதல் கட்டமாக அவர், கடலூரில் உள்ள பிரபல ஜோதிடர் சந்திரசேகரிடம் கட்சி கொடி மற்றும் மாநாடு நடத்த தேதி ஆகியவை குறித்து கேட்டதாக தெரிகிறது.

    அதன்படி, நடிகர் விஜய் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அறிவித்தார். இது விஜய் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநாடு நடத்துவதற்கான இடத்தை பார்வையிட்டனர்.

    இதனால் மாநாடு எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இப்படி இருக்கும் பட்சத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வருகிற 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்திட அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி அக்கட்சியினர் மனு அளித்தனர். இதையடுத்து 21 கேள்விகள் பட்டியலிடப்பட்டு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு கடந்த 2-ந் தேதி விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கடிதம் அனுப்பியிருந்தார்.

    தொடர்ந்து போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கான பதிலை கடிதமாக புஸ்சி ஆனந்த் கடந்த 6-ந் தேதி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசிடம் அளித்தார். அதன் பிறகு மாநாட்டுக்கு அனுமதி வழங்கி 33 நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் ஒன்றை கடந்த 8-ந் தேதி காவல்துறை வழங்கியது.

    இதற்கிடையில் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த பல்வேறு கெடுபிடி போடப்பட்டதால், அதற்கான பணிகள் தொடங்காமல் உள்ளது. மேலும் 23-ந் தேதி திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா? என்ற சூழல் உருவானது.

    இது ஒருபுறம் இருக்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் கட்சியினர் சுவர் விளம்பரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனால் மாநாடு தேதி தள்ளிப்போவது உறுதியானது.

    இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் 27 பேரிடம் மாநாடு நடத்த செப்டம்பர் 23-ந் தேதி வரை ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மொத்தம் 85 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்த காலம் 23-ந் தேதியுடன் முடிவடைவதால், ஒப்பந்த தேதியை நீட்டிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது என்றனர்.

    மேலும் நடிகர் விஜய்யின் ஜாதகப்படி மாநாட்டை அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந்தே திக்குள் நடத்தலாம் (அதாவது ஐப்பசி முதல் வாரத்தில்) என ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீண்டும் கடலூர் ஜோதிடரை இந்த வாரத்தில் சந்திக்க உள்ளதாகவும், அதன் பிறகு மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து மாவட்டத் துணைத் தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான பனையபுரம் வடிவேல் கூறியதாவது:-

    தளபதியின் தமிழக வெற்றி கழக கட்சியின் அரசியல் முதல் மாநாடு எங்களது மாவட்டத்தில் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்த எங்கள் தளபதிக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.

    எங்கள் தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள். அன்று மாநாட்டு வெற்றி திருவிழாவை எங்கள் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம். எங்கள் தளபதியின் உத்தரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவை தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளிலும் விஜய் பதிவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட் படத்திற்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.
    • தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்குகிறார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.

    அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். தளபதி 69 படத்தை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுவார். தற்போது நடிகர் ஷாரூக்கான் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தளபதி எச். வினோத் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    • மலின் 233வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

    விஜய் நடிக்கும் கடைசி படமான "தளபதி 69" படத்தின் அப்டேட்டை இன்று வெளியிடப்பட்டது. அதில், இப்படத்தை எச். வினோத் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கமலின் 233வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் படக்குழு வெளியிட்டனர். இந்த படத்தை, எச். வினோத், இயக்கவுள்ளதாகவும் அப்போது படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் "Rise to Rule" என்ற வாசகத்துடன் கமல் தீப்பந்தத்தை ஏந்தியபடி இருக்கும் KH233 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், எச்.வினோத் இயக்கும் தளபதி 69 குறித்த இன்றைய அறிவிப்பிலும், படக்குழுவினர் வௌயிட்ட போஸ்டரில் தீப்பந்தம் ஏந்தியபடி "The torch bearer of Democrarcy" என்ற வாசகத்துடன் கூடிய "தளபதி 69" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால், கமல் 233 படம் கைவிடப்பட்டு, அது தளபதி 69 படமாக உருவெடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    • கோட் படம் ஒரு பேண்டஸி படம். அந்த அளவில் அதை ரசிக்கலாம்.
    • எனது கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்

    தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு அவர் நிதானமாக பதில் அளித்தார்.

    கேள்வி: ஹேமா கமிட்டி குறித்து உங்கள் கருத்து

    லெஜெண்ட் சரவணன்: கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று நம்புகிறேன்

    கேள்வி: நீங்கள் படங்களில் நடிப்பது அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?

    லெஜெண்ட் சரவணன்: மக்கள் நலன்களில் எப்போதும் எனக்கு அக்கறை உண்டு. காலம் நேரம் அமைந்தால் அரசியலுக்கு வருவேன். எனது கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்.

    கேள்வி: விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் போவீர்களா

    லெஜெண்ட் சரவணன்: இன்னும் அதைப்பற்றி யோசிக்கவில்லை

    கேள்வி: விஜய் கட்சிக்கு நீங்கள் ஆதர்வு தெரிவிப்பீர்களா?

    லெஜெண்ட் சரவணன்: இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. 2026 தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும். வலுவான கூட்டணி ஆமைக்கு கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    கேள்வி: விஜயின் கோட் படம் பார்த்தீர்களா? அந்த படம் குறித்து உங்களது கருத்து

    லெஜெண்ட் சரவணன்: கோட் படம் ஒரு பேண்டஸி படம். அந்த அளவில் அதை ரசிக்கலாம்.

    கேள்வி: சினிமாவில் அடுத்த தளபதி யார்?

    லெஜெண்ட் சரவணன்: நீங்கள் தான் அடுத்த தளபதி யார் என்று சொல்ல வேண்டும்

    என்று தெரிவித்தார்.

    • தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்கவுள்ளார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    தளபதி 69 படத்திற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு போஸ்டரில் தீப்பந்தம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு எனும் பொருள் படும் 'The Torch Bearer Of Democracy' என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். என்று சொல்லப்படுகிறது.

    இப்படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான 'தளபதி' விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தமிழில் தங்களது முதலாவது தயாரிப்பாக அமைவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

    இந்த படம் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான புகழ்பெற்ற 'தளபதி'விஜய்-க்கும்,புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம், புகழ்பெற்ற இயக்குனர் எச். வினோத் மற்றும் தரவரிசையில் இடம் பிடிக்கும் பாடல்களைத் தந்த 'அனிருத் ரவிச்சந்தர்' ஆகியோர் இடையிலான குறிப்பிடத்தக்க புதுமையான கூட்டணியாக அமைகிறது.

    தனது அற்புதமான நடிப்புக்கும், பெரும் ரசிகர் பட்டாளத்துக்கும் பெயர் பெற்ற 'தளபதி'விஜய், 'தளபதி-69'-இல் இதற்கு முன்பு பார்த்திராத தோற்றத்தில் தோன்ற உள்ளார். தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விநியோகப்பதற்கும் பெயர் பெற்ற வெங்கட் கே நாராயணா அவர்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில், 'தளபதி-69'-ஐ தயாரிப்பதன் மூலம் தலைசிறந்த படைப்பை வழங்க உறுதிபூண்டுள்ளனர். இத்திரைப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதுலோகித் என்.கே இணைந்து தயாரிக்கிறார்கள்.

    குறிப்பிடத்தக்க தனது முந்தைய படைப்புகளின் மூலம் பாராட்டப்பட்ட திறமையான இயக்குனரான எச். வினோத் அவர்கள் இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு உயிரளிக்கிறார். 'தளபதி'விஜய் மற்றும் எச்.வினோத் முதன்முறையாக  கூட்டணி சேர்வதன் மூலம் ஒரு புதுமையான மற்றும் அற்புதமான சினிமா அனுபவத்தை அளிக்கும் திரைப்படமாக அமையும் என்பது உறுதியாகிறது.

    இதற்கு முன்பு 'தளபதி'விஜய் நடித்த திரைப்படங்களான கத்தி, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ போன்ற  படங்களுக்கு இசையமைத்து, வெற்றிப் பாடல்களைத் தந்த 'அனிருத் ரவிச்சந்தர்' இத்திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் 'தளபதி' விஜய் அவர்களுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.

    இத்திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை எதிர் நோக்குகிறோம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த அக்டோபரில் துவங்கி, அடுத்த ஆண்டு அக்டோபர்-2025-இல் வெளியாக உள்ளது.

    மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்கள் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கே வி என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் 'தளபதி' விஜய் அவரது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகளையும் இப்படப்பிடிப்பின் போது உருவாகும் புதிய நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள பிரத்யேக வியூகத்தை வகுத்துள்ளது.

    இந்த பிரம்மாண்டமான பயணத்தில் தங்களது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம். இதை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் அன்பு மற்றும் மகிழ்ச்சியை பகிருங்கள். நிறைய அறிவிப்புகள் வரவுள்ளன காத்திருங்கள்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்படம் வெற்றிகரமாக அதன் இரண்டாம் வாரத்தில் பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்த வார இறுதியில் 200 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
    • கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது தளபதி விஜய்க்காக ஒரு டிரிபியூட் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை சமீபத்தில் எச்.வினோத் ஒரு விருது வழங்கும் விழாவில் கூறினார்.

    மேலும் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படத்தின் படத்தொகுப்பாளராக பிரதீப் இ ராகவ் பணியாற்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

    கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது தளபதி விஜய்க்காக ஒரு டிரிபியூட் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அவர் நடிக்கும் கடைசி திரைப்படமாக பேசப்படுகிறது. மக்களும் ரசிகர்களும் அதற்கான வெளிபாடுகளையும் , வருத்தத்தையும் தெரிவித்து வருவதுப் போல் மிகவும் எமோஷனலான வீடியோவாக அமைந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்  என அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×