'வாரிசு' விஜய்யின் மாஸ் டான்ஸ்.. ஜானி மாஸ்டர் கொடுத்த சூப்பர் அப்டேட்..

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜானி மாஸ்டர் - விஜய்
ஜானி மாஸ்டர் - விஜய்
Published on

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாரிசு

இந்நிலையில், நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் மாஸ் லெவல் நடனம் ஒன்று இருப்பதாகவும் இதை பார்த்தால் திரையரங்குகளில் யாரும் உட்கார்ந்து படம் பார்க்கமாட்டீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் அரப்பிக்குத்து பாடலின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com