என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஹிட் அடித்த விஜய் பாடல்.. கொண்டாடும் ரசிகர்கள்
    X

    விஜய்

    ஹிட் அடித்த விஜய் பாடல்.. கொண்டாடும் ரசிகர்கள்

    • ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் கொண்டாடி வந்த விஜய் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
    • இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கி பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனம் பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலி ஓ ஜிம்கானா' வீடியோ பாடல்களை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.

    அரபிக் குத்து

    இந்நிலையில் 'அரபிக்குத்து' வீடியோ பாடல் யூ-டியூபில் சாதனை படைத்துள்ளது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இந்த பாடலை அனிருத், ஜோனிட்டா காந்தி இருவரும் பாடியிருந்தனர். இப்பாடல் ரசிகர்களை கவர்ந்து தற்போது யூ-டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் டாப் மியூசிக் வீடியோ ட்ரெண்டிங் லிஸ்டில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. விஜய்யின் தனித்துவமான நடனத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் படைத்த இந்த சாதனையை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    'அரபிக்குத்து' பாடலின் லிரிக் வீடியோ வெளியான 12 நாட்களிலேயே, யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்திருந்தது, தற்போது இந்த லிரிக் வீடியோ பாடல் 432 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×