கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் - குருவாயூர் அம்பலநடையில்

இப்படம் கடந்த மாதம் 16 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஓடிடி- யில் வெளியாகியது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் - குருவாயூர் அம்பலநடையில்
Published on

சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தில் பிரித்விராஜ் அவரது அசத்தலான நடிப்பின் மூலம் அனைவரையும் கட்டிப் போட்டார். ப்ளெசி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து அதற்கு நேர்மாறாக குருவாயூர் அம்பலநடையில் என்ற காமெடி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கடந்த மாதம் 16 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகளவில் 90 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து பேசில் ஜோசப், நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், சிஜு சன்னி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி திரைப்படமாக அமைந்துள்ள இப்படத்தில் டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஓடிடி- யில் வெளியாகி மக்கள் அனைவரும் பார்த்து விட்டு சமூக வலைத்தலங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படம் ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

உங்களுக்கு காமெடி திரைப்படம் பிடிக்கும் என்றால் இப்படம் கண்டிப்பாக உங்களுக்குதான். இதுவரை இப்படி ஒரு கதைக்களம் தமிழ் சினிமாவில் வரவில்லை. படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com