இயக்குனர்களின் பாராட்டு மழையில் -ஆடுஜீவிதம்

கடந்த சில வாரங்களாகவே பிரித்விராஜ், படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார்.சிறப்பு காட்சியைப் பார்த்த தெலுங்கு திரைத்துறை இயக்குனர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.
இயக்குனர்களின் பாராட்டு மழையில்  -ஆடுஜீவிதம்
Published on

பிலெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், அமலா பால், சோபா மேனன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து, வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'ஆடுஜீவிதம்'.

2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலைத் தழுவி இப்படத்தை இயக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு படபிடிப்பை தொடங்கிய ஆடு ஜீவிதம் படக்குழுவினர், 2023 ஆம் ஆண்டில் படபிடிப்பு பணிகளை முடித்தனர். மலையாள சினிமாவில் ஆடுஜீவிதம் படமே மிக நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்த படமாகும்.

கடந்த சில வாரங்களாகவே பிரித்விராஜ், படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரித்விராஜ் நேற்று தெலுங்கு திரைத்துறையின் முன்னணி இயக்குனர்களை ஆடுஜீவிதம் படத்தின் சிறப்பு காட்சிக்கு அழைத்து இருந்தார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆடுஜீவிதம் படத்தை தெலுங்கு மொழியில் விநியோக உரிமையைப் பெற்றது.

சிறப்பு காட்சியைப் பார்த்த தெலுங்கு திரைத்துறை இயக்குனர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். ஆடுஜீவிதம் படத்தின் "ஓமானே" பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது.

மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு படத்திற்கு பிறகு வெளியாகும் மலையாளப் படம் இதுவே. அதனால் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மேல் உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com