search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banner"

    • அட்டக்கத்தி , பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரித்துள்ளது.
    • இந்த படத்திற்கான துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

    விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் நடித்து வெளியான படம் "இன்று நேற்று நாளை". இத்திரைப்படத்தை ரவிகுமார் இயக்கினார். இத்திரைப்படம் சை ஃபை காமெடி படமாக அமைந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரித்தது. அட்டக்கத்தி , பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரித்துள்ளது.

    அந்த வரிசையில் இந்நிறுவனம் "பிட்சா 4 - ஹோம் அலோன்" திரைப்படத்தையும் "இன்று நேற்று நாளை" இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது.இந்த படத்திற்கான துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த விழா தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

    டைம் டிராவல் கதையம்சம் கொண்ட "இன்று நேற்று நாளை" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் துவங்கி இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டத்திற்கு நடைபயணம் வருகிறார். இதனை வரவேற்று பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் ராஜா தியேட்டர் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள நேஷனல் சர்க்கிள் பகுதிகளில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    பா.ஜ.க டிஜிட்டல் பேனர்கள் இன்று காலையில் காட்பாடி சாலை ஓரம் உள்ள கால்வாயில் வீசப்பட்டு கிடந்தன.

    இதனைக் கண்டு பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நள்ளிரவில் வேண்டுமென்றே மர்ம கும்பல் அதனை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜ.க.வினர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • அனுமதியின்றி பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • அனுமதியின்றி பேனர் அச்சடித்துக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    அனுமதியின்றி பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவித்தது. அத்துடன், விதிமீறலினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கடலூர் மாவட்ட எல்லையில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மட்டுமின்றி, அச்சடித்துக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், அனுமதியின்றி பேனர், செண்டர் மீடியனில் நோட்டீஸ் ஒட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது.
    • பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியின்றி அரசயில்கட்சியினரால் பேனர்கள் வைக்கப்படுகிறது.

    முக்கிய சிக்னல் சந்திப்புகளில் வைக்கப்படும் பேனர்களால் உயிர் பலி ஏற்படுகிறது. இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.

    அதில், எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து வந்து அந்த பேனரை அகற்றினர்.

    மேலும் பேனர் வைத்த அமைப்பின் நிறுவனர் அசோக்ராஜ் உட்பட நிர்வாகிகளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபோல் பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து அசோக்ராஜ் கூறுகையில், ஆதரவற்ற, தெருவோர செல்ல பிராணிகளை மீட்டு வளர்த்து வருகிறோம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களை காப்பாற்றியுள்ளோம். நோணாங்குப்பத்தில் 4 ஆண்டுக்கு முன் மிக மோசமான நிலையில் மீட்டெடுக்கப்பட்ட நாய்க்கு பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தோம்.

    கலெக்டர், புதுவையில் பேனர் வைக்க தடையில்லை என கூறியுள்ளதால் ராஜீவ்காந்தி சிக்னலில் யாருக்கும் பாதிப்பின்றி பேனர் வைத்தோம். ஆனால் நாய்க்கு பேனர் வைக்கக் கூடாது என போலீசார் அகற்றிவிட்டனர் என்றார்.

    ராஜீவ்காந்தி சிக்னலில் பெரியளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
    • தமிழ் ஒளி என்றத் தலைப்பில் பொதுச்செயலர் கவிஞர் திருபுவனை கலிய பெருமாள் தலைமையில் கவிதைப்போட்டி நடை பெற்றது. தொடர்ந்து சிந்தனை அரங்கம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சிந்தனையா ளர்கள் பேரவை சார்பில் கவிதை போட்டி மற்றும் 124-வது சிந்தனை அரங்கம் ஜோதி கண் பராமரிப்பு மைய அரங்கில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். தமிழ் ஒளி என்றத் தலைப்பில் பொதுச்செயலர் கவிஞர் திருபுவனை கலிய பெருமாள் தலைமையில் கவிதைப்போட்டி நடை பெற்றது. தொடர்ந்து சிந்தனை அரங்கம் நடைபெற்றது.

    புதுவை அண்ணல் காந்தி மக்கள் நலச் சங்க நிறுவனர் ஞான மூர்த்தி பங்கேற்று உரையாற்றினார். இதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கவிஞர்க ளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் பேனர் வைக்க தடை செய்ய தலைமைச் செயலா ளர் தலைமையில் சமுக ஜனநாயக அமைப்புகள் அடங்கிய உயர் அதிகார குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் துணைத் தலைவர் மணிமேகலை, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன், துணைச் செயலாளர்கள் விசாலாட்சி, ராஜாராம், உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் செயற் குழு உறுப்பினர் திவ்யா நன்றி கூறினார்.

    • ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,664 சதுர அடி நிலத்தை மீட்டனர்.
    • அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பந்தநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் பசுபதீஸ்வ ரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் பந்தநல்லூர் பிரதான சாலையில் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்தார்.

    மேலும். இந்த கட்டிடத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தவில்லை என பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், மயிலாடு துறை அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை க்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்து சமபய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில், துணை ஆணையர் சாந்தா, கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ், அறநிலையதுறை ஆய்வாளர் கோகிலா தேவி மற்றும் அலுவலர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,664 சதுர அடி நிலத்தை மீட்டனர்.

    மேலும், அந்த இடத்தில் விளம்பர பதாகைகளையும் அமைத்தனர். இதைத் தொடர்ந்து, எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அங்கு பந்தநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தியேட்டர்களில் படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
    • லியோ படம் வெளியாகும் தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 19 தியேட்டர்களில் லியோ படம் வெளியாகி உள்ளது.

    இதனையொட்டி தியேட்டர்களுக்கு முன்பாக ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளதாளம் இசைத்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர். காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கின. முன்னதாக தியேட்டர்களுக்குள் ரசிகர்கள் அனைவரும் ஊழியர்களின் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் பட்டனர். சோதனையின் போது மதுபாட்டில்கள், பட்டாசு, கலர் பொடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திரையரங்குகளுக்குள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தடை விதித்தனர். மேலும் ரசிகர்களை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    ஈரோட்டில் ஒரு தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்றில் விஜய்-யை வருங்கால முதல்வர் என்றும், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை வருங்கால அமைச்சர், வருங்கால எம்.எல்.ஏ, வருங்கால கவுன்சிலர் என பேனர் வைத்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    முன்னதாக தியேட்டர்களில் படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. லியோ படம் வெளியாகும் தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு வாரம் அனைத்து துறைகள் சார்பில் 5-ந் தேதி தொடங்கி வரும் 11-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சை யில் இன்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வழிகாட்டுதலில் அனைத்து துறைகள் சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கியது.

    இப்பேரணியினை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் மாவட்டத் தீயணைப்பு அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் முனியாண்டி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உமா மகேஸ்வரி, சி தொண்டு அமைப்பு நிறுவனர் முனைவர் ஜெகதீஸ்வரி, ரெட்கிராஸ் துணைச் சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைந்த சேவை மைய பொறுப்பாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர்கள் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள், பள்ளி ,கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்று மீண்டும் விளை யாட்டு மைதானம் வந்தடைந்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் செய்திருந்தார்.

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் குற்றச்சாட்டு
    • நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தாலும் எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் பேனர் கலாச்சாரம் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி அரசு ஆதரவுடன் பொதுமக்களின் உயிருக்கு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னலை மறைத்து வைக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் தலைவர்கள் பிறந்த நாளின் பொழுது பேனர்கள் வைப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு பிறந்தநாள் முடிந்த பின்பு அவற்றை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    அதேபோல் புதுவை மாநிலத்தில் போலி பத்திரங்கள் பதிவது, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான இடங்களை அபகரிப்பது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தாலும் எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

    இதனால் குற்றவாளிகள் எந்த ஒரு பயமும் இன்றி போலியாக ஆவணங்கள் தயாரித்து அப்பாவி மக்களின் இடங்கள், சாலைகள், கோவில் இடங்கள் ஆகியவற்றை தொடர்ந்து அபகரித்து வருகின்றனர்.

    இதற்கு எடுத்துக்காட்டாக கிருஷ்ணா நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமும் அபகரிக்கப்பட்டுள்ளது.

    இவற்றுக்கு உடந்தையாக உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் முறையாக புதுவை அரசு எடுக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் புதுவை மாநிலத்தில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் போதைப்பொருட்கள் சரளமாக அனைத்து இடங்க ளிலும் கிடைப்பதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சீரழிவதாகவும் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து புகார்கள் கூறினாலும் அவற்றை ஒடுக்கவும் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே புதுவை கவர்னர் தமிழிசை இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • ரூ.14 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
    • எல்லை கற்கள் நடப்பட்டு தகவல் பதாகை வைக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூரில் கொழுந்தீஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    ரூ.14 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாகப்பட்டினம் இணை ஆணையர் குமரேசன் தலைமையில், திருவாருர் உதவி ஆணையர் ராணி, திருவாரூர் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லெட்சுமி பிரபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு திருக்கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து, எல்லை கற்கள் நடப்பட்டு தகவல் பதாகை வைக்கப்பட்டது.

    இப்பணியில் இத்திருக்கோவில் செயல் அலுவலர் சிவகுமார், கோட்டூர் சரக ஆய்வாளர் புவனேஸ்வரன், நில அளவையர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினை களுக்கு வைக்கப்படும் சிறிய தட்டிகள் கூட சட்டத்தைச் சொல்லி உடனே அகற்றப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பேனர் வைப்பதற்கு ஏற்கனவே விதிமுறைகளும், சட்டமும் இருந்தபோதிலும் அதனை ஆளும் கட்சி தொடர்ந்து மீறி வருகிறது.

    அதே வேளையில் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினை களுக்கு வைக்கப்படும் சிறிய தட்டிகள் கூட சட்டத்தைச் சொல்லி உடனே அகற்றப்படுகிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமும் அதிகார வர்க்கத்தின் ஆணவமுமே காரணமாக இருக்கிறது.

    அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேனர்கள் வைப்பதால் பல்வேறு பாதிப்புகளை மக்கள், சிறு வணிகர்கள் சந்தித்து வருகிறார்கள்.

    எனவே சாலையோரம் மற்றும் சாலை தடுப்பு சுவரில் பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேனர் வைப்பதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவை அரசை கண்டித்து நூதன பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில குழு உறுப்பினர் சரவணன் தொகுதி குழு உறுப்பினர் ஜெயகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    புதுச்சேரி:

    நெல்லிதோப்பு தொகுதி இளைஞர் பெருமன்றம் சார்பில் இடிக்கப்பட்ட மீன் மார்க்கெட் கட்டிடத்தை கட்டி தராத புதுவை அரசை கண்டித்து நூதன பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இளைஞர் மன்ற தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு தொகுதி தலைவர் கோபி, தொகுதி குழு உறுப்பினர்கள் சிவா, ரூவியர்,ஆனந்தகுமார், பாலா, பிரசாந்த் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு தொகுதி செயலாளர் சதீஷ் பெருமான்,

    ம ாநில குழு உறுப்பினர் சரவணன் தொகுதி குழு உறுப்பினர் ஜெயகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ×