search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leaflet"

    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், இன்னர்வீல் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வேளாங்கண்ணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா தொடங்கி வைத்தார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், பேராலயம், கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு,

    உத்திரமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் வழியாக பள்ளியில் நிறைவடைந்தது இந்த பேரணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அவற்றின் பாதிப்புகள், எவ்வாறு தடுப்பது, சுகாதாரத்தை பேணிக்காப்பது, உணவு பழக்க வழக்கங்கள் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    மேலும் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மருதங்காவெளி பள்ளியில் பிரச்சார ஊர்தியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள மருதங்காவெளி நடுநிலைப்பள்ளியில் பிரச்சார ஊர்தியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சரஸ்வதி, வட்டார கல்வி அலுவலர்கள் ராமசாமி, சிவகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், ஸ்ரீதரன், அன்புராணி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், பள்ளி தலைமையாசிரியர் திருஞானம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • விரைவில் தீர்வு வேண்டுமா சமரச மையத்திற்கு வாருங்கள்.
    • வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சமரச நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை தஞ்சாவூர் மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்தப் பேரணியில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விரைவில் தீர்வு வேண்டுமா சமரச மையத்திற்கு வாருங்கள், என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை எழுதியபடி பேரணியாக சென்றனர். பேரணியானது ஐ.டி.ஐ மைதானத்தில் முடிவடைந்தது.

    முன்னதாக சமரச மையத்தில் நேரடியாக சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது குறித்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்திற்கு அனுப்புவது தொடர்பாகவும் இதன் மூலம் உகந்த தீர்வுகளை எட்டுவது குறித்தும் சமரச மையத்தால் நேரடி பேச்சு வார்த்தைகளில் மனித உறவுகளையும் சமூக உறவுகளையும் மேம்படுத்துவது குறித்தும் சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    மேலும் இது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட தலைவர் இந்திராணி, ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜீவக்குமார், வழக்கறிஞரும் மீடியேட்டருமான ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சமரச மையத்தின் நோடல் ஆபிசர் ஆரோக்கிய ராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    • மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.
    • சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள மோகூர் விநாயகா பப்ளிக் பள்ளி, மதுக்கூர் ரோட்டரி சங்கம், காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியை மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் மதுக்கூர் ரோட்டரி சங்க தலைவர் தவசு மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மதுக்கூர் போலீஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    இதற்கு விநாயக பப்ளிக் பள்ளியின் தலைவர் ராமலிங்கம், தாளாளர் அய்யநாதன், முதல்வர் ஜான்பால், துணை முதல்வர் பொன். கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை அடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.இதில் மதுக்கூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், காவல் துறையினர், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், மதுக்கூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • முக்கிய வீதிகள் வழியாக சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பேரணி முடிவடைந்தது.
    • பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், மாவட்ட கலால் துறை அலுவலர் ஹரிதரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ரஜினி, பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி, உதவி பேராசிரியர்கள் பிரவினா, பிரகாஷ், பேரணி ஒருங்கிணைப்பாளரும், அரிமா மாவட்ட தலைவருமான சக்திவீரன் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி முக்கிய வீதிகள் வழியே சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

    போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்து கூறினார்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் மற்றும் ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரியில் இறுதிஆண்டு படிக்கும் மாணவிகள் இணைந்து நடத்திய இயற்கை முறையில் வேளாண் சாகுபடி செய்வது மற்றும் சிறு தானியங்கள் உபயோகம் மற்றும் உற்பத்தி செயவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    விவேகானந்தா தொண்டு நிறுவனச் செயலாளர் தங்க.கண்ணதாசன் வழிகாட்டுதலுடன் கோவில் தேவாராயன்பேட்டை, அன்னுகுடி கிராமங்களில் நடைபெற்றது.

    இதில் ஆர்விஎஸ் கல்லூரி மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் களப்பணியாளர்கள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும், அவற்றின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

    மேலும் சிறுதானியங்கள் ஏன் பயிரிட வேண்டும், அவற்றின் தொழில் நுட்பங்கள், சரி விகித உணவு வகைகள், சிறுதானியங்கள் சந்தை வாய்ப்புகள் பற்றி கிராமப்புற பெண்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் வேளாண் கல்லூரி முன்னோடி மாணவி ஜனோ அபிஷா தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள், விவேகானந்தா சமூக கல்வி சங்கத் தலைவர் தேவராஜன், சங்க உறுப்பினர் சிவக்குமார் களப்பணியாளர் புனிதவள்ளி மற்றும் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார்.

    நகர்நல அலுவலர் லெஷ்மி நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சமுத்து, டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் ஞானாம்பிகை கல்லூரி மாணவிகள், தியாகி நாராயணசாமி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள், டி.பி.டி.ஆர். மாணவர்கள் கலந்து கொண்டு பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டியும், வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பொதுமக்கள் தங்களது திடக்கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளரிடம் வழங்கி புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றனர்.

    நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோ கிக்கப்பட்டது.

    பேரணியில் மயிலாடு துறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி.
    • துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    பேரணியை வேதார ண்யம் வருவாய் கோட்டா ட்சியர் ஜெயராஜ் பவுலின் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், வேதாரண்யம் வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் உத்ராபதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நாகராஜன், அன்பழகன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி சேது ராஸ்தா, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி தெற்கு வீதிவழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது.

    வழிநெடுகிழும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொது மக்களுக்கு வழங்கினர்.

    • போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
    • துண்டு பிரசுரங்களை வழங்கி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி காவல்துறை மற்றும் எல். எம். சி.மேல்நிலைப் பள்ளி சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி எம்எம்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரூபிசாந்தக்குமாரி தலைமை வகித்தார்.

    பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் கிருபாகரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஜய்அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டு போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதை பழக்கங்களுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விளக்கி கூறினார்.

    பின்னர் மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இதில் மாணவ- மாணவிகள் போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் சீர்காழி முக்கிய வீதிகள் வழியே பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியில் தேசிய மாணவர் படை, சாரண-சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம், இளஞ்செஞ்சிலுவை அமைப்பு மற்றும் திரளான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இளம்செஞ்சிலுவை அலுவலர் ஜோகன்னா நன்றிக கூறினார்.

    • பேரணியில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி புறப்பட்டனர்.
    • போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தியும் செல்லும் வழியில் பொது மக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகித்தனர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் சர்வதேச போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை ரயிலடியில் இன்று காலை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி புறப்பட்டனர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் செல்லும் வழியில் பொது மக்களுக்கு துண்டுபி ரசுரம் விநியோகித்தனர். பேரணியானது பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்று தஞ்சை அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் வெங்கடேசன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், டாக்டர்கள் சிங்காரவேலு, பாரதி, நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கொரடாச்சேரி வட்டாரத்தில் பெருந்தரகாகுடி, எண்கண் இலவன்கார்குடி, முசிறியம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் சுகாதார நடைப்பயணம் நடைபெற்றது
    • ஊராட்சி முழுவதும் ஊர்வலமாக சென்று மக்களுக்கு சுகாதார திட்டத்தின் கீழ் திட்ட அறிக்கையை தயாரிக்க உதவுவது குறித்த துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    திருவாரூர்:

    தூய்மை பாரத இயக்கம் முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை தேர்வு செய்ய, மக்களுடன் நடைபயணம் மேற்கொண்டு பட்டியல் தயாரிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

    அதன்படி கொரடாச்சேரி வட்டாரத்தில் பெருந்தரகாகுடி, எண்கண் இலவன்கார்குடி, முசிறியம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் சுகாதார நடைப்பயணம் நடைபெற்றது. முசிறியம் ஊராட்சியில் நடைபெற்ற சுகாதார நடை பயணத்திற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இவர்கள் அனைவரும் ஊராட்சி முழுவதும் ஊர்வலமாக சென்று மக்களுக்கு சுகாதார திட்டத்தின் கீழ் திட்ட அறிக்கையை தயாரிக்க உதவுவது குறித்த துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இத்திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தேர்வு செய்ய மக்கள் அரசுக்கு உதவ வேண்டுமென ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டார். இப்பேரணியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×