என் மலர்
நீங்கள் தேடியது "procession"
- அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
- 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
அதிராம்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை அதிராம்பட்டினம் வண்டிப் பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து விநாயகர் ஊர்வலம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.
ஏரிப்புறக்கரையில் சிலைகளை கரைக்க கடற்கரையில் படகு தயார் நிலையில் நிறுத்தி வைக்கபட்டது.
500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
- ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- கோவில் முன்பு இருந்து தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மெயின் ரோடு, திருவேங்கடம் சாலை, முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரில் உள்ள கோமதியாபுரம் தெருக்கள், லட்சுமியாபுரம் தெருக்கள், புதுமனை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் அமைக்கப்பட்டிருந்த 25 விநாயகர் சிலைகளும், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட 2 சிலைகளும், சங்கர நாராயணசாமி கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
பாரதீய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார். தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநிலத் துணை தலைவர் மாரிமுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோவில் முன்பு இருந்து தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மெயின் ரோடு, ராஜ பாளையம், திருவேங்கடம் சாலை, முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது.
இந்த ஊர்வலத்தில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சுப்பிரமணியன், இந்து முன்னணி நெல்லை கோட்ட அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, இந்து முன்னணி நகர பொருளாளர் குருச்சந்திரன், பொதுச் செயலாளர் விஜய் பாலாஜி, நகர செயலாளர்கள் சங்கர், மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் பாலகுமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டையுடன் ஊர்வல மாக சென்றது.
- 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 3 அடி முதல் 10 அடி உயரம் வரை 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். அப்போது விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இந்நிலையில் 3-ம் நாளான நேற்று அனைத்து சிலைகளும் ஏரியில் கரைப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டை யுடன் ஊர்வல மாக சென்றது. இதனைக் காண திரளான பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை காவல் துறை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கு வழிவகுத்தனர். இந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சின்ன சேலம் காவல் ஆய்வாளர் ராஜாராமன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.
பின்னர் விநாயகர் சிலையை ஒன்றன்பின் ஒன்றாக கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடனும் விநாயகர் சிலையை சின்னசேலம் ஏரியில் கரைக்கப்பட்டது. சிலையை கரைக்கும் போது பக்தர்கள் ஏரிக்குள் அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க போலீ சாரின் கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு, இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி கோவிந்தராஜ் தலைமையில் திண்டி வனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக் டர்கள் கலையரசி, லட்சுமி, கலையரசன் நகரம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். இந்து முன்னணி சார்பாக 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக அமைதியான முறையில் நடைபெற்றது.
- முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
- போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் பகுதியில் 87 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. பின்னர், விநாயகர் சதுர்த்தி நாளிலேயே 40 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இந்நிலையில் கும்ப கோணம் மகாமகக்குளம் பகுதியில் இருந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்ய ப்பட்டிருந்த 47 விநாயகர் சிலைகளை மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு நாகேஸ்வ ரன்கோவில் கீழவீதி, வடக்கு வீதி, காந்தி பூங்கா, மடத்து தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்க ப்பட்டன.
இதில் பா. ஜனதா கட்சியின் அறிவு சார்பு பிரிவின் மாநில தலைவர் கார்த்திகேயன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீர்த்திவாசன் (கும்பகோணம்), ஜாபர்சித்திக் (திருவிடை மருதூர்), பூரணி (பாபநாசம்) உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- நகரில் மொத்தம் 41 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
சீர்காழி:
சீர்காழியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சீர்காழி நகர் மற்றும் புளிச்சக்காடு, நந்தியநல்லூரர், பட்டவி ளாகம், திட்டை, கோயில்பத்து, வினாயக ர்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆபத்து காத்தவிநாயகர், கணநாதர், சித்திவிநாயகர்,விஸ்வரூப விநாயகர்.
மாணிக்க விநாயகர், செங்கழுநீர் விநாயகர், ராஷ்ட்ர விநாயகர், சித்திவிநாயகர், வீரசக்திவிநாயகர், செல்வவிநாயகர் என 41 இடங்களில் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3தினங்கள் வழிபாடு நடைபெற்றது.இதனிடையே திங்கள்கிழமை 5விநா யகர்சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்ட நிலையில் செவ்வாய் இரவு மீதமுள்ள 36விநா யகர்சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.
முன்னதாக சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு அனைத்து விநாயகர் சிலைகளும் சிறப்பு பேன்டு வாத்தியம், வாணவே டிக்கையுடன் ஊர்வலமாக பழைய பேருந்துநிலையத்தில் ஒன்றிணைந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்ட பின்னர் ஊர்வலமாக உப்பனாற்றுக்கு சென்றது.
உப்பனாற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சர ண்ராஜ்,விநாயகர் சதுர்த்தி விழாக்குழு ஒருங்கிணை ப்பாளர் வி.கே.செந்தில்கு மார், மற்றும் பலர் பங்கே ற்றனர். சீர்காழி டி.எஸ்.பி.லா மெக் மேற்பார்வையில் , காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ௨௦௦-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டி ருந்தனர். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோவில் அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
நேற்று மாலை ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்டு பூதலூர் பெரியார் புரத்தில் இருந்து அதிரடி இசை முழங்க ஊர்வலம் தொடங்கியது.ஊர்வலம் வடக்கு பூதலூர் வந்த போது மழை பெய்தது மழையில் நனைந்து கொண்டே விநாயகர் ஊர்வலம் சென்று வெண்ணாற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
- நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- சிறிய விநாயகர் சிலை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்டுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதற்கு முன்னதாக ஒன்றரை அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் வைக்க ப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
இதையடுத்து இரவு 32 அடி உயர அத்திமரத்திலான விநாயகர் சிலை ஊர்வல த்தையடுத்து நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பாக யாக பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வல வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.
தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் கோவில் முன் தொடங்கி நீலா கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சாலை, காடம்பாடி, பால் பண்ணை ச்சேரி வழியாக நாகூர் வந்தது. ஊர்வலத்தின் முன்பாக மங்கள இசையுடன் பல்வேறு கச்சேரிகள் இசைக்கப்பட்டது.
இன்று(19ம் தேதி) காலை ஊர்வலம் நாகூர் வெட்டாற்று பாலத்தை வந்தடைந்ததும் விஸ்வரூப விநாயகருக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய விநாயகர் சிலையை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்டு கிறது ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வடமாநிலத்தவர்கள் 380-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்திருந்தனர்.
- சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அதனை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பாளை சீவலப்பேரி ரோட்டில் உள்ள கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் வாங்கி சென்று பிரதிஷ்டை செய்வார்கள். பின்னர் அதனை நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் அங்கு 380-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வடமாநிலத்தவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்து அமைப்பினரும் அந்த சிலைகளை வாங்குவ தற்காக முன்பணம் செலுத்தி வைத்திருந்தனர். அதில் ரசாயன கலவை இருந்ததால் சிலைகளை விற்க அனுமதி மறுக்கப்பட்டு குடோன் சீல் வைக்கப்பட்டது.
அனுமதி
அந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி, பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தயாரான விநாயகர் சிலைகளை வழி பாட்டுக்கு எடுத்து செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. உடனடியாக நேற்று இரவில் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக இந்து முன்னணியினர் எடுத்து சென்றனர்.
தொடர்ந்து நாளை மாநகர பகுதியில் 78 இடங்கள் உள்பட சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சிலைகளை வருகிற 24-ந்தேதி வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான போதிய வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து பூஜை செய்ய மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்
வருகிற 24-ந்தேதி இந்த சிலைகள் அனைத்தையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அதனை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்து அமைப்பினர் சிலைகளை எடுத்து சென்றனர்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் மாசு விளைவிக்காத விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களை இன்று மாலை போலீசார் அறிவிக்கின்ற னர். அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் அந்த இடங்களில் தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்படுள்ளது.
- சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
- ஊர்வலமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மாவட்ட விநாயகர் கமிட்டி தலைவருமான சரண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் , சீர்காழி, மங்கை மடம், பூம்புகார், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய இடங்களில் 147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு மறுநாள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மறுநாள் பழைய பஸ் நிலையத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றி ணைக்க ப்பட்டு பின்னர் ஊர்வ லமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தில் அனைத்து பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது.
- புதிய பஸ் நிலையத்திலிருந்து போலீசார் அணிவகுப்பு ஒத்திகை புறப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் 31-ம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஒத்திகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை முன்னிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சோமசுந்தரம், ஆயுதப்படை டி.எஸ்.பி. சந்திரமோகன், இன்ஸ்பெக்டர்கள் முத்துப்பேட்டை ராஜேஷ், பெருகவாழ்ந்தான் முணியான்டி, எடையூர் அனந்த பத்மநாதன், களப்பாள் விஜயா, திருக்களார் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
- சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தின ஊர்வலம் நடந்தது.
- இந்த கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தினத்தையொட்டி ஊர்வலம் நடந்தது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள வேலுநாச்சியார் சிலை முன்பு ஊர்வலம் தொடங்கியது. நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று வண்ண கையெழுத்துகளால் எழுதப்பட்ட கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.