search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக உறவினர்கள் போராட்டம் - பாளையில் ஊர்வலமாக சென்றனர்

    • மாயாண்டியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரண உதவி வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காலையில் 6 பேர் திடீரென அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரியை சேர்ந்த தொழிலாளி மாயாண்டி என்பவர் கடந்த 10-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    13 பேர் கைது

    இதுதொடர்பாக போலீசார் 3 சிறுவர்கள் உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மாயாண்டியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரண உதவி வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5-வது நாளாக போராட்டம்

    இன்று 5-வது நாளாக ஊர்வலமாக சென்று பாளை லூர்துநாதன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். இதையொட்டி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இன்று காலையில் 6 பேர் திடீரென அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மாயாண்டியின் உறவினர்கள் பாளை ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு லூர்துநாதன் சிலைக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய துணை கமிஷனர் சீனிவாசன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டால் வழக்குபதிவு செய்யப்படும்.

    இதனால் மாண வர்கள் எதிர்காலம் கேள்வி க்குறியாகும். எனவே குறிப்பிட்ட சிலர் மட்டும் பேச்சுவார்த்தைக்கு வருவமாறு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய மாயாண்டியின் உறவினர்கள் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுதலை செய்தால் நாங்கள் கலைந்து செல்கிறோம் என தெரிவித்தனர்.

    தொடர்ந்து முக்கிய சிலர் மட்டும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    மீண்டும் பேச்சுவார்த்தை

    மாயாண்டியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    Next Story
    ×