என் மலர்

  நீங்கள் தேடியது "almsgiving"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றது
  • கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 14 -வது மாத அன்னதான நிகழ்ச்சி இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சண்முகவேல் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர கூட்டுறவு இயக்குநர் லவராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் அரியமூர்த்தி, மற்றும் மந்திரசூடாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி ெதாடங்கி வைத்தார்.

  அன்னதானத்தை அறக்கட்டளை நிறுவனரும் தொழிலதிபருமான சீனிவாசன் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம், கதிரேசன், மாரிமுத்து, தங்கராஜ், செல்வம், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், காளிராஜ், முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் பாண்டியன் அறக்கட்டளை சார்பாக தமது நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  • மதியம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும்.

  திருமங்கலம்

  திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் சந்திரகி ரகணத்தையொட்டிவருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 வரை நடைஅடைக்கப்படும்.

  சந்திரகிரகணம் மாலை 2.39க்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைவதால் நடை சாற்றப்படுகிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

  அதே நேரத்தில் இந்த கோவிலில் மதியம் நடைபெறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு செம்பிய நாட்டு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.
  • இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  பரமக்குடி

  மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.

  இவ்விழாவில் செம்பிய நாடு மறவர் சங்கத் மாநிலத் தலைவர் சி.எம்.டி ராஜாஸ் தேவர் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் எஸ்.செந்தில்ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

  இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பஞ்சபூத மகாயாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மங்கள பொருட்களுடன், பிரசாதம் வழங்கப்பட்டது.

  சீர்காழி:-

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் மறைந்த நாடி.ராஜேந்திரா சுவாமிகள் நிர்மானித்த ஒளிலாயம் அமைந்துள்ளது.

  இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

  27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களும், பசுக்களை பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

  இங்கு அமைந்துள்ள சத்குரு ஒளிலாயம் பீடத்தில் நிறுவனர் சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 5-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

  உலக நன்மை வேண்டி நிலத்திற்கு அதிபதியான தியாகேசர், நீருக்கு அதிபதியான ஜம்பு கேஸ்வரர், அக்னிக்கு அதிபதியான அருணாச்சலேஸ்வரர், வாய்வுக்கு அதிபதியான காளகஸ்தீஸ்வரர், ஆகாயத்திற்கு அதிபதியான சிதம்பரேஸ்வரர் சுவாமிகள் அம்பாளுடன் எழுந்தருள செய்து, அவர்களுக்கு முன்பாக ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பஞ்சபூத மகா யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி திபாராதனை நடைபெற்றது.

  பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

  தொடர்ந்து சுமார் 1500பெண்களுக்கு சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று சேலைகளை வழங்கினார்.

  அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ ம.சக்தி, பேரூர் செயலாளர் போகர்.ரவி, முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மங்களப் பொருட்களுடன், நெய்வேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது.

  குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை ஒளிலாயம் பீடத்தின் நிர்வாகிகள் நாடி.செல்வமுத்துகுமரன், நாடி.செந்தமிழன், நாடி.மாமல்லன், நாடி.பரதன் மற்றும் கிராமமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் இன்று பிறந்த நாள்.
  • கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  சேலம்:

  சேலம் குமரகிரி பே ட்டையை சேர்ந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற சார்பில் நாமமலை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி முதல் சனிக்கி ழமை யொட்டி பூஜை நடைபெறும்.

  டாக்டர் பா.சிவந்தி ஆதித்த னார் பிறந்த நாள் என்பதால் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் குமரகிரி பேட்டை சேர்ந்த நாகராஜ், சின்னத்துரை, சந்திரசேகர், வைரமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  இதில் பனங்காட்டு மக்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் மோகனவேல், லட்சுமணன், திருப்பதி ஸ்டீல் கோபி மற்றும் நாடார் சமுதாய பொது மக்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  அலங்காநல்லூர்

  பாலமேடு அருகே உள்ள தேவசேரி கிராமத்தில் அமைந்துள்ள மந்தையம்மன், 18-ம் படி கருப்பணசாமி, வேலப்ப அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அழகர்கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விருதுநகர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கு உச்சிகால பூஜைகள் நடந்தன.

  ஸ்ரீவில்லிபுத்தூர்

  விருதுநகர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பொன் இருளப்ப சுவாமி கோவில் வளாகத்தில், புதிதாக பொன் விநாயகர் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  இதன் தொடர்ச்சியாக, நூர்சாகிபுரத்தில் பொன் இருளப்ப சுவாமி சாமியாடி அழைப்பு, வைத்தியலிங்காபுரம் கோவில் வீட்டில் இருந்து பொங்கல்பானை அழைத்தல், இரவு சாமி அலங்காரம், அன்னதானம் நடந்தது. கோவில்பட்டி பாலகணேஷ் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடந்தது. 'பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கு உச்சிகால பூஜைகள் நடந்தன. இன்று (3-ந் தேதி) அதிகாலை பொங்கல் வைத்தல், அன்னதானம், கிடா வெட்டு நிகழ்வோடு ஆவணித்திருவிழா நிறைவடைந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
  • அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை குமாரம் கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

  அலங்காநல்லூர்

  அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் சக்தி விநாயகர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாள் யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

  யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

  அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை குமாரம் கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேவராஜ் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  திருப்பத்தூர்:

  கந்திலி அருகே உள்ள சின்னூர் மலை குன்றின் மீது ஸ்ரீ பாலமுருகனை கோவில் உள்ளது.

  இந்த கோவிலுக்கு ஆடி 18 முன்னிட்டு சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகை தருவதை ஒட்டி அப்பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் .

  அதனை ஒட்டி சிறப்பு பஸ்களை தேவராஜ் எம் எல் ஏ கொடியை அசைத்தும் அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  கோவிலுக்கு குடிநீர், மற்றும் சாலை வசதி, பஸ் வசதி கேட்டுள்ளீர்கள் உடனடியாக செய்து தரப்படும் என கூறினார்.

  நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே. எஸ். அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் அசோக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ஊர் கவுண்டர்கள் கே. வெங்கடாசலம், பி ரமேஷ் ஜெகதீசன், மாரப்பன், குணசேகரன், கிருஷ்ணன், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை மாவட்டம் பொதும்பு ஊராட்சியில் அமைந்துள்ள ருக்மணி சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
  • விழாவுக்கான ஏற்பாடுகளை குருநாதன் சேர்வை வகையறாக்கள் மற்றும் விழா குழுவினர், பொதும்பு கிராம மக்கள் செய்திருந்தனர்.

  அலங்காநல்லூர்

  மதுரை மாவட்டம் பொதும்பு ஊராட்சியில் அமைந்துள்ள ருக்மணி சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. புதிதாக அமைக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் சன்னதி, ஆண்டாள் சன்னதி, நவகிரக சன்னதிகளின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

  4 கால யாக பூஜையுடன் மகா சங்கல்பம், வாஸ்து ஹோமம், மகா பூர்ணாவதி தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி கோபுர விமானங்களுக்கு புனித தீர்த்தங்கள் கொண்டு செல்லப்பட்டு மகா சம்ப்ரோசனம் நடைபெற்றது.

  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை குருநாதன் சேர்வை வகையறாக்கள் மற்றும் விழா குழுவினர், பொதும்பு கிராம மக்கள் செய்திருந்தனர்.

  ×