கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக அன்னதான நிகழ்ச்சி

இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றதுகோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்
கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்ட காட்சி.
கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்ட காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 14 -வது மாத அன்னதான நிகழ்ச்சி இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சண்முகவேல் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர கூட்டுறவு இயக்குநர் லவராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் அரியமூர்த்தி, மற்றும் மந்திரசூடாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி ெதாடங்கி வைத்தார்.

அன்னதானத்தை அறக்கட்டளை நிறுவனரும் தொழிலதிபருமான சீனிவாசன் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம், கதிரேசன், மாரிமுத்து, தங்கராஜ், செல்வம், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், காளிராஜ், முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் பாண்டியன் அறக்கட்டளை சார்பாக தமது நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com