என் மலர்
நீங்கள் தேடியது "Guru Puja"
- பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. சிவபெருமானுக்கு கண் கொடுத்தவரும், மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த 63 நாயன்மார்களில் ஒருவருமான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணிக்கு மேல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கண்ணப்பநாயனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் புதிய காசி விஸ்வநாதர், கண்ணப்ப நாயனார் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். குருபூஜை விழாவிற்கு இருக்கூர் பட்டக்காரரும், இடும்பை இளைய நாயகருமான சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர் கலந்து கொண்டார்.
விழாவில் பாண்ட மங்கலம் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணப்ப நாயனார், புதிய காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது.
- இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.
சேலம்:
சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.
இந்த பூஜையில் 1008 வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஞான அகஸ்தியருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் 1008 சங்கு வைத்து பூஜை செய்து, பக்தர்கள் தங்கள் கைகளால் சங்காபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட இடம்புரி சங்குகள் 900 பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதேபோல் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோட்டையூர் பகவதி சாமிகள், பண்ணவாடி சாமிகள், சன்னியாசிகள், அகோரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ நவகோடி சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் சித்தரசு சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
- ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழாவும் நேற்று அதிகாலை வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
- வருகிற 3-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள சூட்டுபொத்தையடி வாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழாவும் நேற்று அதிகாலை வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் காலை 10 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.
இதில் ஆயிரகணக்கான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
திருவிழா நாட்களின் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெறுகிறது. இரவு ஸ்ரீ முத்துகிருஷ்ணா சித்திரகூடத்தில் லலிதகலா மந்திர் கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை பெரியபுராணம் நாட்டிய நாடகம் நடைபெற்றது.
வருகிற 3-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் வழங்கப்படுகிறது. 4-ந் தேதி காலை 10 மணிக்கு குருபூஜை நடைபெறுகிறது. 6-ந் தேதி சூட்டு பொத்தை மலைமீது திருகார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 7-ந் தேதி குருஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது.
8-ந் தேதி பவுர்ணமி கிரிவல வழிபாடும் இரவு விளக்குபூஜை வழிபாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு செம்பிய நாட்டு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.
- இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் செம்பிய நாடு மறவர் சங்கத் மாநிலத் தலைவர் சி.எம்.டி ராஜாஸ் தேவர் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் எஸ்.செந்தில்ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
- அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
காளையார்கோவில்
மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.
மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை முன்னிட்டு 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்ைக மாவட்டத்தில் 31-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பிறப்பித்துள்ளார். நாளை (24-ந் தேதி) மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட நினைவு தினம் திருப்பத்தூரில் அரசு சார்பிலும், 27-ந்் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா நடைபெறுகிறது.
இதையொட்டி 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்துள்ளார்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா வருகிற 12ந் தேதி நடக்கிறது.
- சுந்தரானந்தர் குருபூஜை விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
மதுரை
தமிழ் மரபில் பதினெண் சித்தர்களுள் ஒருவர்- சுந்தரானந்தர். இவர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். சட்டைமுனி சித்தரின் சீடர். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி, சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். 'வாக்கிய ஆத்திரம், வைத்தியத்திரட்டு, தீட்சா விதி, சிவயோகஞானம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா, பழைய திருக்கல்யாண மண்ட பத்தில் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்க உள்ளது. அப்போது சுந்தரானந்த சித்தருக்கு திருமுறை பாராயணம், புஷ்பாஞ்சலி நடக்க உள்ளது.
இதனைத்தொடர்ந்து "எல்லாம் வல்ல சித்தர்கள்" என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானச ம்பந்தன் சொற்பொழிவாற்றுகிறார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரத்தை கவுரவித்து பணமுடிப்பு பழகுகிறார். அதன் பிறகு அன்னதானம் வழங்கப்படுகிறது.
சுந்தரானந்தர் குருபூஜை விழா நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் மூர்த்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
- சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுககேசர் 190-வது குருபூஜை விழா நடந்தது.
- இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுககேசர் ஜீவ சமாதி உள்ளது. நல்லாகுளம் வடகரையில் அமைந்துள்ள அவருடைய ஜீவ சமாதி பீடத்தில் சித்தர் சிவந்தி லிங்க சுவாமி ஏகமயார் வம்சாவளியினர் பரம்பரை பூசாரிகள் மற்றும் சித்தர் வாரிசுதாரர்கள்
190-வது குருபூஜை விழாவை நேற்று நடத்தினர்.இதையொட்டி சித்தர் முத்துவடுகேசர் சிலைக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்த சித்தர் முத்துவடுககேசருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குருபூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் சிறப்பாக அன்னதானம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அன்னதானத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருபூஜை ஏற்பாடுகளை பரம்பரை பூசாரிகள் செய்திருந்தனர்.