search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்கல் அணைக்கட்டு திருவிழா எனப்படும் மும்முனிவர் குருபூஜை விழா
    X

    வெங்கல் அணைக்கட்டு திருவிழா எனப்படும் மும்முனிவர் குருபூஜை விழா

    • குருபூஜை விழா 37-ம் ஆண்டாக இன்றுடன் மூன்று நாட்களாக நடைபெற்றது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,வெங்கல் அணைக்கட்டு திருவிழா எனப்படும் மும் முனிவர் குருபூஜை விழா 37-ம் ஆண்டாக இன்றுடன் மூன்று நாட்களாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை கணபதி பூஜையுடன் மூன்று நாள் திருவிழா துவங்கியது. எனவே, ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ செண்பகா தேவி அம்மன், ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர், மும்முனிவர் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை வெங்கல் மும்முனிவர் திருக்குற்றாலம் மெளன குரு சுவாமி படம் மற்றும் செண்பகாதேவி அம்மன் உற்சவர் ஆகியவற்றின் ஊர்வலம் அம்மணம்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து புறப்பட்டு அணைக்கட்டுக்கு வந்தடைந்தது. இன்று காலை அம்மணம்பாக்கம் அணைகட்டு ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ வெங்கல் மும்முனிவர் திருக்குற்றால மௌன குரு சுவாமிகள் மற்றும் ஸ்ரீசெண்பகா தேவி அம்மன் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் உற்சவர் ஸ்ரீசெண்பகாதேவி அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக திருமாங்கல்யகயிறு, மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தைச்சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் இக்கோவிலுக்கு

    வந்து தரிசனம் செய்தனர். இந்த அணைக்கட்டு திருவிழா துவங்கியபின் தான் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவிலின் ஆடித்திருவிழா துவங்கியதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் எம்.கணேசன், செயலாளர் டி.ஆர்.நந்தகோபால், பொருளாளர் டி.கணேசன், கௌரவத் தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் விழா குழுவினர்கள் பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×