என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகாலிங்கம் சித்தர் குருபூஜை பெருவிழா
- மகாலிங்கம் சித்தர் குருபூஜை பெருவிழா நடைபெற்றது
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் தலையாட்டி சித்தர் ஆசிரமத்தில், மகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை பெருவிழா நடந்தது. விழாவிற்கு ஆசிரம நிர்வாகி காமராஜ் தலைமை வகித்தார். இயக்குநர்கள் நந்தேஸ்வரன், சக்திஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருச்சி ஓங்கார குடில் பாம்பாட்டி சித்தரின் சீடர் வேலுதேவர் கலந்துகொண்டு யாக வேள்வியை தொடங்கி வைத்தார். கோமாதா பூஜை , 210 மகா சித்தர்கள் யாகமும், தொடர்ந்து அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தவயோகி மருதவேல் தேவர், எல்ஐசி முகவர் அசோகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






