தஞ்சை பெரிய கோவிலில் சுந்தரர் குருபூஜை சிறப்பு வழிபாடு

ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை விழா நடந்தது.கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி-அம்பாள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி-அம்பாள்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குரு பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அதன்படி நேற்று ஆடி சுவாதியை முன்னிட்டு இரவு சுந்தரர் குரு பூஜை விழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சுந்தர சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுந்தரரை வழிப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com