என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரணியை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக நீரிழிவு தின விழிப்புணர்வு பேரணி
- விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
- நீரிழிவு நோய் சிகிச்சை முறைகளில் இன்றைய முன்னேற்றம் குறித்து உரையாற்றினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் மருதுதுரை மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரிஸ், கௌதமன் கலந்து கொண்டனர்.
மருத்துவத்துறை பேராசிரியர்கள் பராந்தகன், கண்ணன், உதவி மருத்துவமாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் நடந்த கருத்தரங்க கூட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் கால் பாதுகாப்பு குறித்து பேராசிரியர் மருதுதுரை, பேராசிரியர் பிரபுசங்கர், உரையாற்றினர்.
திருச்சி தனியார் மருத்துவமனை நிர்வாகி விவேக்சுந்தரம், நீரிழிவு நோய் சிகிச்சை முறைகளில் இன்றைய முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்கள்.
இக்கருத்தரங்கில் மருத்துவ பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜீவானந்தம் நன்றி கூறினார்.