search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள்

    விழிப்புணர்வு ஊர்வலம்

    • உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வி துறையின் உத்தரவுபடி தாரமங்கலம் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை பள்ளியின் தலைமைஆசிரியர் எழில் மணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தாரமங்கலம்:

    உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வி துறையின் உத்தரவுபடி தாரமங்கலம் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை பள்ளியின் தலைமைஆசிரியர் எழில் மணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வட்டார கல்வி அலுவலர் அமலா, வட்டார மேற்பார்வையாளர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் தேர்நிலையம், அண்ணாசிலை, பஸ் நிலையம் வழியாக சென்று கைலாசநாதர் கோவில் அருகில் நிறைவு பெற்றது.

    ஊர்வலத்தில் பதாகை கையில் ஏந்தியபடி "சேர்ப்போம் சேர்ப்போம் மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்ப்போம் "கொடுப்போம் கொடுப்போம் சம வாய்ப்பு கொடுப்போம் " ஆதரிப்போம் ஆதரிப்போம் மாற்றுத் திறனாளிகளை ஆதரிப்போம் " என்று கோசங்களை எழுப்பினர்.

    ஊர்வலத்தில் மாற்று திறனாளிகளின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்,வட்டார ஆசிரிய பயிற்றுனர்கள்,முட நீக்கு வல்லுநர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பு ஆசிரிய பயிற்றுனர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×