மதுக்கூரில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Published on

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே உள்ள மோகூர் விநாயகா பப்ளிக் பள்ளி, மதுக்கூர் ரோட்டரி சங்கம், காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியை மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் மதுக்கூர் ரோட்டரி சங்க தலைவர் தவசு மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மதுக்கூர் போலீஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

இதற்கு விநாயக பப்ளிக் பள்ளியின் தலைவர் ராமலிங்கம், தாளாளர் அய்யநாதன், முதல்வர் ஜான்பால், துணை முதல்வர் பொன். கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை அடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.இதில் மதுக்கூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், காவல் துறையினர், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், மதுக்கூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com