search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • பேரணியில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி புறப்பட்டனர்.
    • போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தியும் செல்லும் வழியில் பொது மக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகித்தனர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் சர்வதேச போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை ரயிலடியில் இன்று காலை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி புறப்பட்டனர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் செல்லும் வழியில் பொது மக்களுக்கு துண்டுபி ரசுரம் விநியோகித்தனர். பேரணியானது பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்று தஞ்சை அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் வெங்கடேசன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், டாக்டர்கள் சிங்காரவேலு, பாரதி, நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×