search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருளைக்கிழங்கு"

    • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
    • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    வடா பாவ் பன் - 10

    உருளைக்கிழங்கு - 4

    மஞ்சள் தூள் - 1 பின்ச்

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - 1/4 ஸ்பூன்

    கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

    எலுமிச்சை - 1

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    கடலை மாவு - 200 கிராம்

    தண்ணீர் - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - பொறிக்க

    பச்சை மிளகாய் - 10

    புதினா சட்னி - தேவையான அளவு

    கார சட்னி - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் உருளைக் கிழங்கை ஒரு குக்கரில் போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • வேகவைத்த உருளைக் கிழங்கை தோல்களை நீக்கி, ஒரு மத்து அல்லது மேஷர் கொண்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    • பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.


    • கிளறிய உருளைக்கிழங்கை சிறிது நேரம் ஆற விடவும்.

    • ஆறிய கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றவும்.

    • நன்கு எண்ணெய் காய்ந்தவுடன் உருட்டி வைத்திருந்த உருளைக்கிழங்கை கடலை மாவு கலவையில் சேர்த்து எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்து கொள்ளவும்.

    • அதே எண்ணெயில் பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

    • பின்னர் வடா பாவ் பன்னை எடுத்து குறுக்கே இரண்டாக வெட்டிக் கொள்ளவும். (முழுமையான வெட்டக்கூடாது)

    • வெட்டிய பன்னின் உள்ளே ஒருபக்கம் புதினா சட்னியையும், மறுப்பக்கம் சட்னியை தடவி பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை நடுவில் வைத்து அதனுடன் பொறித்து எடுத்த பச்சை மிளகாய் வைத்து பரிமாறிவும்.

    • இதோ வீட்டிலேயே எந்த தீங்கும் இல்லாத வடா பாவ் ரெடி.

    • குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்...
    • நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்...

    கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் இருப்பார்கள் அவர்களுக்கு வீட்டிலே மிக பெரிய பொருள் செலவு இல்லாமல் ஈசியாக ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 4

    ரவை- 2 ஸ்பூன்

    மைதா மாவு- 2 ஸ்பூன்

    அரிசி மாவு- 3 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

    மிளகு- 1 1/2 ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    கறிவேப்பிலை- தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    முதலில் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

    இப்போது வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் நீக்கி உறித்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

    அடுத்து பவுலில் உள்ள கிழங்குடன் மிளகு, ரவை, மைதா மற்றும் அரிசி மாவு என இவை அனைத்தினையும் நன்றாக 2 நிமிடம் வரை பிசைந்து கொள்ளுங்கள்.

    2 நிமிடம் கழித்து பவுலில் உள்ள பொருளுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

    கடைசியாக கையில் சிறிதளவு எண்ணெயினை தடவி கொண்டு தயார் செய்து வைத்துள்ள உருளைகிழங்கை கலவையை கையில் தொட்டு நீளமாக ஊருட்டி வைத்து விடுங்கள்.

    இதனை தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு அதில் செய்து வைத்துள்ளதை போட்டு பொன் நிறமாக வரும் வரை பொரிய விட்டு எடுக்க வேண்டியது தான்.

    அம்புட்டு தான் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெடி....

    குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்... நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

    • உடல் எடை அதிகம் இருக்கும் நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களிலும் கருமை காணப்படும்.
    • செயற்கை முறையில் நாம் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.

    முக மற்றும் வெளிபுற தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், உடலில் உள்ள உள்பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    அக்குள், கழுத்து மற்றும் தொடையின் உள்பகுதிகளில் கருமை காணப்படும், அதுவும் உடல் எடை அதிகம் இருக்கும் நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களிலும் கருமை காணப்படும்.

    இதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் சொரசொரப்பாகி அரிப்பு போன்ற இன்னும் பிற தொந்தரவுகளையும் கொடுக்கலாம். இதற்கு செயற்கை முறையில் நாம் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அது சிலநாட்கள் மட்டுமே பலன் கொடுக்கும். நிரந்தரமான தீர்வு என்பது இல்லாமலே போய்விடுகிறது.

    நாம் நமது வீட்டிலேயே எளிய முறையில் கருமையை நீக்க ஒரு சில டிப்ஸ்களை பார்ப்போம்.

    * பச்சை பயறை நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்ந்து கருமையாக உள்ள பகுதிகளில் தேய்த்து வரவேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதால் கருமை நீங்குவதுடன் நிரந்தர தீர்வு காணலாம்.


    * கற்றாழையை தோல்களை நீக்கிவிட்டு அதன் ஜெல் பகுதியை நன்கு மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். தினமும் இரவு நேரங்களில் அக்குள், கழுத்து, தொடை ஆகிய பகுதிகளில் தேய்த்து வர 15 நாட்களில் நல்ல மாற்றம் உங்களுக்கு தெரியும்.


    * தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை சேர்ந்து தேய்த்து வர ஒரு வாரங்களில் கருமை நீங்குவதை உங்களால் உணர முடியும்.

    * உருளைக்கிழங்கை ஒரு மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் சாரை எடுத்து தொடையின் கருமையான பகுதிகளில் இரவு உறங்க செல்வதற்கு முன் தேய்ந்து 30 நிமிடம் காத்திருப்பிக்கு பின் கழுவிவர கருமை விரைவில் நீங்கும்.

    • மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
    • வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்து வருகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காந்தி மைதானம் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி மாவட்டம் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரம் முதல் 2 ஆயிரம் டன் வரை உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    ஆனால் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தூரில் இருந்து வழக்கமாக 45 டன் உருளைக்கிழங்கு வரத்து இருக்கும். தற்போது 15 டன் மட்டுமே வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    வரத்து குறைவால் உருளைக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது. 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு முன்பு ரூ.800-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.1,000-க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
    • உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    கோதுமை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1 கப்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவைக்கு

    ரவை - 1/4 கப்

    தக்காளி - 2 கப்

    வெங்காயம் - 2

    குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்

    முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

    துருவிய சீஸ் - 1 கப்

    உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்

    வெண்ணெய் - சிறிது

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 250 கிராம்

    பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    • பெண்களின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள்.
    • கண்களுக்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும்.

    பொதுவாக ஒரு பெண்ணை பற்றி பேசும்போது அவளின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள். ஒருவருடைய பார்வை என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைக்கு பலபேருடைய கண்களை பார்த்தால் கண்களில் சோர்வு தான் இருக்கிறது. எப்போதும் தூங்காததுபோல் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கண்கள் மிகவும் ஆரோக்கியம் இழந்து காணப்படுகிறது.

    இதற்கு பல காரணங்களை சொல்லலாம். கண்ணுக்கு அழகை தருவது எப்போது என்றால் அதற்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும். நன்றாக தூங்கவில்லை என்றாலும் கண்ணுக்கு அது ஆரோக்கிய குறைவுதான். அதனால் முடிந்தவரை நன்றாக தூங்க வேண்டும்.

    ஆனால் நாங்கள் நன்றாக தூங்குகிறோம், ஆனால் எப்போது கண்களில் ஒருவித எரிச்சல் இருக்கிறது. கண்களில் குளுமை இல்லை. கண் வறட்சியாக இருக்கிறது என்றால் முதலில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணித்து கண்களையும் குளுமைப்படுத்தும்.

    இரண்டாவதாக முக்கியமான பொருள் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய். இப்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தனித்தனியே துருவி எடுத்து பிழிந்தால் நன்றாக சாறு நமக்கு கிடைக்கும். இப்போது வெள்ளரிக்கா சாறு ஒரு ஸ்பூன் என்றால், உருளைக்கிழங்கு சாறும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். அதன்பிறகு அதனுடன் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் இதையும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல பஞ்சில் இந்த சாற்றில் ஊறவிட்டு அந்த நனைந்த பஞ்சினை எடுத்து இரவு படுக்க செல்வதற்கு முன்னர் கண்களில் 20 நிமிடம் ஒற்றிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது நமது கண்கள் மிகவும் குளிர்ச்சியடைந்து காணப்படும். எவ்வளவு உடல் சூடு இருந்தாலும் இதை வைத்த எடுத்த உடனேயே உங்களது கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கண்கள் குளிர்ச்சியாக இருந்தால் காட்சியும் குளிர்ச்சியாக இருக்கும். நாமும் எல்லோரையும் கனிவுடன் பார்க்கலாம். இதனை குழந்தைகளுக்கும் தாராளமாக பயன்படுத்தலாம். தொடர்ந்து நாம் இதனை 2 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களையும் இது நமக்கு போக்கி கொடுக்கும்.

    • ஒரு கிலோ ரூ.120 ஆக குறைந்தது
    • கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, மிளகாய் ரூ.70

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை ஏறுமுகமாக இருந்தது. தக்காளியின் உற்பத்தி குறைந்ததையடுத்து விலை உயர்ந்து காணப்பட்டது. விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டது.

    ரேஷன் கடைகள் மூல மாகவும், தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. குமரி மாவட்டத்திற்கு ஏற்கனவே குமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக இங்கிருந்து தக்காளி விற்பனைக்கு வரவில்லை. பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளியின் விலை தினமும் ஏறுமுகமாக காணப்பட்டது.

    அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை உயர்ந்து காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் தக்காளியின் பயன்பாட்டை குறைத்தனர். தற்போது தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கி யுள்ளது. ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடியிலிருந்து தக்காளி விற்பனைக்காக வர தொடங்கியதையடுத்து விலை குறைய தொடங்கி யுள்ளது. ஏற்கனவே ஆரல்வாய்மொழி, பணகுடி பகுதியில் இருந்து 5 பாக்ஸ் தக்காளிகள் வந்த நிலையில் தற்போது 100 பாக்ஸ் தக்காளி விற்பனைக்கு வருகிறது. உள்ளூரில் இருந்து தக்காளிகள் வரத் தொடங்கியதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 1 கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. மிளகாய், கத்தரிக்காய், கேரட், பீன்ஸ் விலை குறைந்துள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.30, தக்காளி ரூ.120, கத்தரிக்காய் ரூ.50, மிளகாய் ரூ.70, வழுதலங்காய் ரூ.50, சேனை ரூ.70, வெள்ளரிக்காய் ரூ.30, புடலங்காய் ரூ.25, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.50.

    • உருளைக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது.
    • உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்துக்கொள்வது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது உண்மைதான் என்றாலும் உருளைக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. உருளைக்கிழங்கை சாறு எடுத்தும் பருகலாம். அது காரத்தன்மை வாய்ந்தது என்றாலும் உடலில் அமிலத்தன்மையை குறைக்க உதவும். கருவளையம், கண் வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    * உருளைக்கிழங்கு சாறு வயிற்றில் அமிலத்தன்மையை சீராக்கும் திறன் கொண்டது. அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்போது 50 மி.லி முதல் 100 மி.லி வரை உருளைக்கிழங்கு சாறு பருகலாம்.

    * அல்சர் பாதிப்புக்கு நிவாரணம் தரும் தன்மை உருளைக்கிழங்கு சாறுக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * கருவளையத்தால் பாதிக்கப் படுபவர்கள் உருளைக்கிழங்கு சாறு பருகி வரலாம். கண்களுக்கு அடிப்பகுதியிலும் உருளைக்கிழங்கு சாறை தடவி வரலாம். அல்லது மெல்லிய உருளைக்கிழங்கு துண்டுகளை கண்களின் மேல் அரை மணி நேரம் வைத்திருக்கலாம்.

    * கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதற்கு உருளைக்கிழங்கு சாறு உதவும்.

    * முகம் மற்றும் கண்கள் வீங்கி இருந்தால் உருளைக்கிழங்கு சாறை உபயோகிக்கலாம். அதில் இருக்கும் நீர்ச்சத்து வீக்கத்தை குறைக்கும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் கொடுக்கும்.

    * உருளைக்கிழங்கில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. அது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.

    * ஒரு டம்ளர் உருளைக்கிழங்கு சாறு பருகுவதன் மூலம் ஒருநாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்தை ஏறக்குறைய பெற்றுவிடலாம். சாப்பிடும் உணவில் வைட்டமின் சி இருப்பது உடலில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

    * துத்தநாகம், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை உருளைக்கிழங்கில் உள்ள மற்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். இந்த வைட்டமின்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    * தோல் அழற்சி உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு உதவியாக இருக்கும். பொடுகு பிரச்சினை கொண்டவர்கள் உருளைக்கிழங்கு சாறை உச்சந்தலையில் தடவி வருவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
    • கடந்த வாரம் வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.30 வரை விற்பனையாகி வந்தது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பீன்ஸ் போன்ற மலை காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    அங்கு மொத்த வியாபாரிகள் காய்கறிகளை ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளையும் உருளைக்கிழங்கு ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மண்டிகளில் ஏல மூலம் விற்பனை செய்யப்பட்டும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

    கடந்த வாரம் வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.30 வரை விற்பனையாகி வந்தது.

    தற்போது கிலோவுக்கு ரூ.15 அதிகரித்து, ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயி வினோதன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ் கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக முட்டைகோஸ்களை அறுவடை செய்வதற்கு கிலோவுக்கு ரூ.5 வரை செலவாகும். கடந்த வாரம் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    பொங்கல் அன்று அதிகபட்சமாக ரூ.2,200-க்கு மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்பட்டது. நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்கை ஒரு மாதத்திற்கு மேல் வைத்து பயன்படுத்தலாம் என்பதால், நீலகிரி உருளைக்கிழங்கு அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டதால் விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு சில வாரங்கள் நீடிக்கும் என தெரிகிறது. இதன் மூலம் மற்ற காய்கறிகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவில் இருந்து மண்டிகளுக்கு வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பெரியவெங்காயம் மண்டிகள் ஊட்டி சாலையிலும், கேரட், பீன்ஸ், நூல்கோல், டர்னிப், முள்ளங்கி, மேராக்காய், பீட்ரூட், பஜ்ஜி மிளகாய் மண்டிகள் அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன.

    இதில் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் இருந்து அதிகளவில் கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜடையம்பாளையம் புதுமார்க்கெட் பகுதியில் இருந்தும் திருச்சி, சென்னை, மதுரை மற்றும் கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் கேரளாவில் நாளை மறுநாள் (8-ந் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையில் விருந்தினர்களுக்கு காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்களே அதிகம் பரிமாறப்படும்.

    இதனால் கேரளாவில் இருந்து இந்த மண்டிகளுக்கு வியாபாரிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் 45 கிலோ எடை கொண்ட கர்நாடகா மாநிலம் திம்பம் பகுதியை வரும் உருளைக்கிழங்கு ஒரு துண்டு ரூ.1,300 முதல் ரூ.1,700 வரையும், ஹாசன் பகுதியில் இருந்து வரும் கிழங்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையும், ஆக்ரா கிழங்கு ரூ.1,100 முதல் ரூ.1,300, குஜராத் கிழங்கு ரூ.1,050 முதல் ரூ.1,300, ஊட்டி கிழங்கு ரூ.1,800 முதல் ரூ.2,200 வரை விற்பனை செய்யப்படுகிறது.இதே போல் ஜடையம்பாளையம் புதுமார்க்கெட் பகுதியில் மேரக்காய் 1 கிலோ ரூ.12 முதல் ரூ.13 வரையும் பீட்ரூட் ரூ.25 முதுல் ரூ.45, கேரட் ரூ.65 முதல் ரூ.110, பீன்ஸ் ரூ.60 முதல் ரூ.70, கோஸ் ரூ.8 முதல் ரூ.15, நூல்கோல் ரூ.68 முதல் ரூ.80 வரையும், டர்னிப் ரூ.50 முதல் ரூ.80, முள்ளங்கி ரூ.10முதல் ரூ.20 வரையும், பஜ்ஜி மிளகாய் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வியாபாரிகள் அதிகளவில் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்து செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    ×