என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dinner"

    • முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
    • 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

    ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்தி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், 2வது டெஸ்ட்டுக்கு முன்பு இந்திய வீரர்களுக்கு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பயிற்சியாளர் கம்பீர் இந்திய வீரர்களுக்கு நாளை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இரவு விருந்து அளிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

    • வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்.
    • அப்போது மத்திய கிழக்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    வாஷிங்டன்:

    மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காசா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

    இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து விருந்து அளித்துள்ளார்.

    அதன்படி, பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஆகியோரை தனித்தனியாக டிரம்ப் சந்தித்து விருந்து அளித்தார்.

    ஏற்கனவே தனது 2-வது பதவிக் காலத்தின்போது சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். இதன்மூலம் காசா போரில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.

    தற்போதைய இந்தச் சந்திப்பின்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, அமெரிக்க ஜெட் விமானங்கள், கணினி சேவையகங்கள், அலுமினிய உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

    அதேபோல், அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின்னுடன் ஆலோசிக்கப்பட்டது.

    • சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.
    • இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் சாலை யோரம் வசிக்கும் ஆதர வற்றோர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேஷமான தினங்களில் சாப்பாடு வாங்கி கொடுக்கும் பழக்கத்தை பலர் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் காலை உணவு மற்றும் மதிய உணவுகளையே வழங்குவார்கள். இரவு நேரங்களை கணக்கிட்டு பலரும் உணவு வழங்குவதில்லை.

    இந்நிலையில் சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் பசியை போக்கும் வகையில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 'சென்னை ரொட்டி பேங்க்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி தினமும் இரவு உணவை வழங்கி வருகிறார்.

    2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் லத்திகாசரணுடன் சுஜாதா விஸ்வநாத், மகாதேவன், நிசாத் பசீர், ராஜீவ் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெண்டல் ஹெல்த் (ஐ.எம்.எச்) மையத்தில் சேர்த்து சிகிச்சை பெறும் பெரும்பாலானோர் வறுமையில் வாடுபவர்களாகவே உள்ளனர். இதுபோன்ற நபர்களை சிகிச்சைக்காக அழைத்து வருபவர்கள் தங்களது கூலி வேலையை விட்டுவிட்டே அவர்களோடு வந்து தங்குகிறார்கள்.

    இப்படி ஐ.எம்.எச்.சில் இரவில் தங்குபவர்களுக்கு இரவு உணவை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட இந்த உணவு வழங்கும் திட்டத்தை பின்னர் படிப்படியாக விரிவுபடுத்த இருக்கிறோம் என்றார் முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, ஐ.எம்.எச். மையத்தில் உணவு வழங்கி விட்டு சேத்பட்டில் 25 திருநங்கைகளுக்கு உணவு வழங்கப்படும். சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் என்றார்.

    மும்பையில் எனது 'பேட்ஜ்மேட்' ஆன சிவானந்தன் என்பவர் அங்கு 'ரொட்டி பேங்க்' என்ற பெயரில் மும்பை வாசிகளுக்கு இரவு உணவை ரொட்டியாக வழங்கி வருகிறார். அதுவே எங்களது இரவு சாப்பாடு வழங்கும் திட்டத்துக்கு முன்னோடியாகும்' என்று கூறிய லத்திகா சரண் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். தமிழக காவல் துறையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்த லத்திகா சரண் பணி காலத்தில் பல்வேறு உதவிகளை பலருக்கும் செய்து உள்ளார். ஓய்வுக்கு பிறகும் அதுபோன்ற பணியை அவர் தொடர்ந்து பசியாற்றி வருவது பாராட்டுக்குரியது தான்.

    • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லி பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் விருந்தளித்தார்.
    • இதில் கலந்துகொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை குடியரசு தலைவர், பிரதமர் வரவேற்றனர்.

    புதுடெல்லி:

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் சிறப்பு விருந்தளித்தார்.

    சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வரவேற்றனர்.

    இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்ஷிதா, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மனைவி யுகோ கிஷிடா, ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜியா, மொரீஷியஸ் பிரதமர் மனைவி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

    • சிறைக்கு வந்து உணவு சாப்பிட முடியும்.
    • சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிடலாம்.

    இங்கிலாந்தில் உள்ள மிக பழைமையான சிறை காதலர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் இந்த சிறைக்கு வந்து உணவு சாப்பிட முடியும்.

    காதலர்கள் தங்கள் இணையுடன் இந்த பழைமை மிக்க சிறையில் தங்களை அடைத்துக் கொண்டு உள்ளிருந்த படி தாங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த சிறை காதலர் தினத்தை சிறப்பாக மாற்றுவதற்கு தயாராகி வருகிறது. இங்கு காதலர்கள் வழக்கமான சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிட முடியுமாம்.

     


    சிறையில் உணவு சாப்பிடுவதற்கான கட்டணம் 215 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரம் என துவங்குகிறது. இதுதவிர 900 ஆண்டுகள் பழமையான நார்மன் க்ரிப்ட் வளாகத்திலும் டின்னர் செல்லலாம். இதற்கான கட்டணம் 230 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    காதலர் தினத்தை ஒட்டி மிக பழமையான வளாகத்தில் உள்ள ஆறு பிரத்யேக லொகேஷன்களில் ஒன்றை தேர்வு செய்து காதலர்கள் அங்கு தங்களது நேரத்தை செலவழிக்கலாம். 

    • குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    • காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். அதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று நம்புகிறார்கள். அப்படி கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. உடற்பயிற்சி வழக்கத்தை முறையாக பின்பற்றி வருவதுடன் மேலும் சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

    1. தண்ணீர்:

    காலையில் எழும்போது பலருக்கும் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். பல் துலக்கியதும் தண்ணீர் பருகுவதன் மூலம் அதனை விரட்டியடிக்கலாம். ஒரு டம்ளர் சூடான நீருடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். சியா விதை அல்லது ஆளிவிதையை சூடான நீரில் கலந்தும் பருகலாம். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்யலாம். உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தலாம்.

    2. உடற்பயிற்சி:

    தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் ஏதாவதொரு யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். அது சுறுசுறுப்பாக உணர வைக்கும். அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு மன ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

    3. புரதம்-நார்ச்சத்து:

    காலை உணவை ஒரு போதும் தவிர்க்கக்கூடாது. அது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாக அமைந்திருப்பது சிறப்பானது. நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை அவை தரும். மதிய உணவுக்கு இடையே தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையும் தடுக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

    4. நீர்ச்சத்து:

    எல்லா பருவ காலநிலையிலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறி எலக்ட்ரோலைட் சம நிலையின்மை மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அடிக்கடி பருக வேண்டும். அவை உடல் எடையை குறைப்பதற்கும் வித்திடும்.

    5. நீச்சல்:

    நீச்சல் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமையும். கோடையில் ஏற்படும் சோர்வை விரட்டி உற்சாகத்தையும் கொடுக்கும். நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது டோபமைன் வெளியீட்டை தூண்டும். தொப்பை கொழுப்பை எரிப்பதற்கு இது நல்ல பயிற்சியாகவும் அமையும்.

    6. இரவு உணவு:

    கோடை காலத்தில் இரவு உணவை குறைவாகவே சாப்பிட வேண்டும். அவை எளிதில் செரிமானமாகும் விதமாகவும் இருக்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    7. தூக்கம்:

    முறையான தூக்கம் முக்கியம். அது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். போதுமான நேரம் தூங்காதது எடை அதிகரிப்பு மற்றும் பசிக்கு வழிவகுக்கும்.

    • குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்...
    • நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்...

    கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் இருப்பார்கள் அவர்களுக்கு வீட்டிலே மிக பெரிய பொருள் செலவு இல்லாமல் ஈசியாக ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 4

    ரவை- 2 ஸ்பூன்

    மைதா மாவு- 2 ஸ்பூன்

    அரிசி மாவு- 3 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

    மிளகு- 1 1/2 ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    கறிவேப்பிலை- தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    முதலில் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

    இப்போது வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் நீக்கி உறித்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

    அடுத்து பவுலில் உள்ள கிழங்குடன் மிளகு, ரவை, மைதா மற்றும் அரிசி மாவு என இவை அனைத்தினையும் நன்றாக 2 நிமிடம் வரை பிசைந்து கொள்ளுங்கள்.

    2 நிமிடம் கழித்து பவுலில் உள்ள பொருளுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

    கடைசியாக கையில் சிறிதளவு எண்ணெயினை தடவி கொண்டு தயார் செய்து வைத்துள்ள உருளைகிழங்கை கலவையை கையில் தொட்டு நீளமாக ஊருட்டி வைத்து விடுங்கள்.

    இதனை தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு அதில் செய்து வைத்துள்ளதை போட்டு பொன் நிறமாக வரும் வரை பொரிய விட்டு எடுக்க வேண்டியது தான்.

    அம்புட்டு தான் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெடி....

    குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்... நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

    • விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர்.
    • ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

    2014 ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள நட்சத்திர நடிகர்களான விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர். இப்படத்தை ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. காஜல் அகர்வால், மஹத், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

    ஜோ மல்லூரி ஜில்லா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவர் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் ஜில்லா படத்தின் போது நடந்த சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

    அவர் கூறியதாவது ஜில்லா படப்பிடிப்பில் போது நடிகர் விஜய், மோகன்லால் மற்றும் மோகன்லாலின் குடும்பம் மற்றும் ஜோ மல்லூரியை அவர் வீட்டில் விருந்து சாப்பிட அழைத்துள்ளார். இரவு 7 மணி அளவில் இவர்கள் விஜய் வீட்டிற்கு சென்றடைந்தனர்.

     

    விஜய், விஜயின் மனைவி மற்றும் 2 பிள்ளைகள் இவர்களை அன்பாக வரவேற்த பின் விஜய் அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார். மோகன்லால் எத்தனை முறை கூறியும் விஜய் அவருடன் உட்கார்ந்து சாப்பிட மறுத்துவிட்டார். அவர் வந்த விருந்தாளிகளை கவனிப்பதே முக்கியம் என்ற மனநிலையில் இருந்தார். விஜய் அவரின் விருந்தாளியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணமுடையவர். என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம்.
    • இரவு உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது.



    நடப்பது

    இரவு உணவு சாப்பிட்ட உடனேயே சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று கூறப்படு கிறது. இவ்வாறு செய்வது உடல் நலத்துக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. ஏனெனில் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய் வதால் கை, கால்களுக்கு ரத் தம் செல்லும். இது செரிமானத் தில் குறுக்கிடுகிறது. எனவே சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து நடக்கலாம்.


    தண்ணீர் பருகுவது

    நம் உடலுக்கு தண்ணீர் தேவை. ஆனால் அதை சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு தண்ணீர் பருக வேண்டாம். குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் காத்திருக்கவும்.


    பழங்கள் சாப்பிடுவது

    இரவு உணவு உண்ட உடனேயே பழங்கள் சாப்பிடு வதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதை செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது. பல் துலக்குவது.


    பல் துலக்குவது

    இரவு உணவு உண்ட உடனேயே பல் துலக்கும் பழக்கமும் பலருக்கும் உண்டு. ஆனால் அது. பல்லின் எனாமல் அடுக்கை பாதிக்கும். அதனால் பற்கள் இயற்கையான பொலிவை இழக்கும். எனவே இரவு உணவு உண்ட உடனே பல் துலக்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருந்து பல் துலக்கலாம்.


    டீ, காபி குடிப்பது

    பலர் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடிப்பார்கள். இரவுப் பணியில் இருப்பவர்கள் அதிகமாக காபி, டீ அருந்துவார்கள். உண்மை யில் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடித்தால்,செரிமானம் பாதிக்கப்படும். வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் ஏற்படும். உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலுக்கு கிடைக்காது. முக்கியமாக இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படாது. எனவே சாப்பிட்ட உடனேயே காபி, டீ குடிக்க வேண்டாம்.


    குளிப்பது

    சாப்பிட்ட உடனேயே குளித்தாலும், உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் செரிமான மண்டலத்துக்குச் சரியாகப் போவதில்லை. இதனால் செரிமானம் சீராக நடைபெறாது.


    உறங்குவது

    சிலர், சாப்பிட்ட உடனே படுக்கையில் சாய்ந்துவிடு வார்கள். அவ்வாறு உடனே உறங்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் செரிமான பாதிப்பு ஏற்படும். வாயு. அமிலத்தன்மை அதிகரித்து, உண்ணும் உணவு கொழுப்பாக மாறும். எனவே உடல் எடை கூடும். அதனால் படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிடுங்கள்.

    • திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் (ம) அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது.
    • அனைவரின் நிலையும் நார்மலாக உள்ளதாக என்று தாகுர்த்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் கூறினார்.

    உத்தரபிரதேச மாநிலம் மொராபாத்தில் தாகுர்த்வாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரித்நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் (ம) அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது. உணவுடன் கேரட் அல்வாவும் பரிமாறப்பட்டது.

    இரவு உணவு சாப்பிட்ட பிறகு, சில விருந்தினர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விருந்தில் சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 150 பேருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரின் நிலையும் நார்மலாக உள்ளதாக என்று தாகுர்த்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் கூறினார்.

    இனிப்பு உணவை தயாரிக்கும்போது சேர்க்கப்பட்ட கோவா (மாவா) என்ற மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டதால் அதனை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    ×