search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maida flour"

    • குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்...
    • நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்...

    கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் இருப்பார்கள் அவர்களுக்கு வீட்டிலே மிக பெரிய பொருள் செலவு இல்லாமல் ஈசியாக ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 4

    ரவை- 2 ஸ்பூன்

    மைதா மாவு- 2 ஸ்பூன்

    அரிசி மாவு- 3 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

    மிளகு- 1 1/2 ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    கறிவேப்பிலை- தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    முதலில் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

    இப்போது வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் நீக்கி உறித்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

    அடுத்து பவுலில் உள்ள கிழங்குடன் மிளகு, ரவை, மைதா மற்றும் அரிசி மாவு என இவை அனைத்தினையும் நன்றாக 2 நிமிடம் வரை பிசைந்து கொள்ளுங்கள்.

    2 நிமிடம் கழித்து பவுலில் உள்ள பொருளுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

    கடைசியாக கையில் சிறிதளவு எண்ணெயினை தடவி கொண்டு தயார் செய்து வைத்துள்ள உருளைகிழங்கை கலவையை கையில் தொட்டு நீளமாக ஊருட்டி வைத்து விடுங்கள்.

    இதனை தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு அதில் செய்து வைத்துள்ளதை போட்டு பொன் நிறமாக வரும் வரை பொரிய விட்டு எடுக்க வேண்டியது தான்.

    அம்புட்டு தான் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெடி....

    குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்... நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

    • தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கிறது மைதா.
    • மைதா மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது.

    ஊட்டச்சத்துமிக்க பொருட்களை உட்கொண்டால்தான் உடல்நலனை பாதுகாக்கலாம் என்பது தெரிந்திருந்தும் பலராலும் தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கிறது மைதா. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடியது என்று தெரிந்திருந்தும் அதன் சுவைக்கு அடிமையாகி பலரும் விரும்பி உட்கொள்கிறார்கள்.

    அவர்களின் ருசிக்கு தீனிபோடும் விதமாக மென்மையான பரோட்டா முதல் பலதரப்பட்ட பேக்கரி பலகாரங்கள் வரை மைதாவில் தயாராகின்றன. இந்த மாவை ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன நல்ல மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

    எடை குறையும்

    சுத்திகரிக்கப்பட்ட இந்த மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்துவிடும். குறுகிய காலத்திற்குள் உடலுக்கு அதிக அளவு ஆற்றலையும் வழங்கிவிடும். அதனால் சில மணி நேரத்துக்குள் பசி உணர்வை தூண்டிவிடும். அதிக அளவு சாப்பிடுவதற்கும் வழிவகுத்துவிடும்.

    மைதாவை விலக்கி வைப்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பேணலாம். அதிகம் பசி எடுப்பதை குறைத்து உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். மைதாவுக்கு மாற்றாக முழு தானிய உணவுகளை தேர்ந்தெடுத்தால் அதிலிருக்கும் அதிக நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடப்பதற்கு வழிவகுக்கும்.

    பசியை தூண்டாமல் வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும்.

     செரிமான ஆரோக்கியம்

    முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது மைதாவில் நார்ச்சத்தோ, ஊட்டச்சத்துக்களோ இல்லை. செரிமான அமைப்பை பராமரிக்க அவை அவசியம். மைதாவை தவிர்ப்பதன் மூலம் குடல் நலனை பேணலாம். அவை சிறப்பாக செயல்படவும் ஊக்குவிக்கலாம். உணவு உட்கொண்ட பிறகு வயிறு வீக்கம், அசவுகரியம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    நாள்பட்ட நோய்களை குறைக்கலாம்

    மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் டைப்- 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களுடன் தொடர்புடையவை. உணவுப்பட்டியலில் இருந்து மைதாவை நீக்குவதன் மூலம் நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கலாம். முழு தானியங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேணி நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கின்றன.

    சருமம் பொலிவாகும்

    மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கும் வித்திடும். மைதாவை தவிர்ப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அதற்கு மாற்றாக முழுதானியங்களை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் தோல் மீளுருவாக்கம் பெறுவதற்கு உதவி புரியும். தோலின் நிறமும் மேம்படும்.

    மனநிலை மேம்படும்

    மன ஆரோக்கியத்திற்கும் உண்ணும் உணவிற்கும் கூட தொடர்பு இருக்கிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு மனநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிடும். அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதிக்கும். மூளைக்கு சீரான ஊட்டச்சத்துக்களை வழங்கும் முழு தானியங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம், மனநிலை மேம்படும். மனத்தெளிவும் கிடைக்கும்.

    மந்த உணர்வு

    சுத்திகரிக்கப்பட்ட மாவை உட்கொள்வது மந்தமாக உணர வைக்கும். ஆற்றலை மெதுவாகவும், சீராகவும் வெளியிடும் முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை பெறலாம்.

    மேம்படுத்தப்பட்ட சுவை

    சுத்திகரிக்கப்பட்ட மாவில் முழு தானியங்கள் தரும் சுவையை உணர முடியாது. முழு கோதுமை, ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்றவைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அவற்றின் மேம்பட்ட சுவையை முழுமையாக உணரலாம்.

    நோய் எதிர்ப்பு செயல்பாடு

    முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின்கள் பி, ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவில் அதிக முழு தானியங்களை சேர்ப்பதன் மூலமும், மைதாவை தவிர்ப்பதன் மூலமும், நோய்த்தொற்றுகளை தடுக்கலாம். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கிடைக்க செய்யலாம்.

    • நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது.
    • சர்க்கரை நோய் உருவாகுவதற்கு காரணம் மைதாவில் தயாராகும் உணவுகள்தான்.

    வளர்ந்து விட்ட நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது. புதிது புதிதாக பரவுகின்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அதை பரிசோதிக்க முதலில் எலிக்கு செலுத்துவதே வாடிக்கையாக உள்ளது. ஏனெனில் தயாரிக்கப்படும் மருந்து மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு.

    அதனால் என்ன என்கிறீர்களா? உலகில் தற்போது பரவலாக காணப்படும் சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், அது வராமல் தடுக்கவும் அனைவரும் முயற்சி செய்வார்கள். அதற்காக சில யோசனைகளையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும். ஆனால் பெரும்பாலும் இந்த சர்க்கரை நோய் உருவாகுவதற்கு காரணம் மைதாவில் தயாராகும் உணவுகள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    சர்க்கரை நோய் தடுப்புக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எலிக்கு கொடுத்து பரிசோதிப்பதற்காக எலிக்கு முதலில் சர்க்கரை நோயை உருவாக்குகின்றனர். இதற்காக அவர்கள் அலாக்சாம் என்ற மருந்தை ஊசி மூலம் அதன் உடலில் செலுத்துவதாகவும், இந்த ஊசியை செலுத்திய மறுநாள் எலிகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்.

    இந்த அலாக்சாம் ஊசி தயாரிக்க பயன்படும் கெமிக்கல் மைதாவில் நிறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து ஓட்டல்களிலும் பரோட்டா உணவு வழங்கி வருகின்றனர். மக்களும் இதை ஆர்வத்துடன் சாப்பிட்டு செல்கின்றனர். இந்த பரோட்டாவுக்கு பயன்படும் மைதாவை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் அதில் எலிக்கு செலுத்தப்படும் அலாக்சாம் கெமிக்கல் நிறைந்திருப்பதாக மதுரை கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் தானோ என்னவோ கேரளாவில் உள்ள உணவகங்களில் பரோட்டா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகு வதற்கு இதுபோன்ற உணவு பொருட்களே 70 சதவீதம் காரணமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    எனவே உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தி சுகர், கேன்சர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களுக்கு ஆளாகாமல் இருக்க பரோட்டா போன்ற மைதா உணவுகளை தவிர்க்கலாமே! பரோட்டா பிரியர்கள் உஷார்!

    ×