என் மலர்

  நீங்கள் தேடியது "sleep"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும்.
  முறையாக 7-8 மணி நேர தூக்கம் அன்றாடம் இல்லையா? இரவில் அதிக நேரம் தனியே விழித்து தவிக்கின்றீர்களா? இதனால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பார்ப்போம்.

  * தூக்கம் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம். தூங்கும் பொழுதுதான் நம் உடலில் ரிப்பேர்கள் நடக்கின்றன. வளர்ச்சி ஏற்படுகின்றது. சக்தி சேமிக்கப்படு கின்றது. ஊட்டச் சத்து உடலுக்கு அளிக்கப்படு கின்றது.

  * தூக்கத்தில் தான் ஹார்மோன்கள் சீர் செய்யப்படுகின்றன.

  * நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகின்றது

  * ஞாபக சக்தி கூடுகின்றது. தூக்கமின்மை ஒருவரை பித்து பிடித்தவர் போல் ஆக்கி விடும்.

  தூக்கமின்மை

  * மறதி நோயினை ஏற்படுத்தும். கவனிக்கும் திறன் வெகுவாய் குறையும்.
  * தூக்கமின்மை அதிக எடையினைக் கூட்டும்.
  * சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்.
  * இருதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
  * மனநிலை பாதிக்கப்படுவர்.
  * ப்ராஸ்சேர் புற்று நோய் பாதிப்பு ஆண்களுக்கு கூடும்.

  ஆக தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூக்க பயத்திற்கான அறிகுறிகள் என்னவென்றால் பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை.
  போதிய தூக்கமே மனிதனை சுறுசுறுப்பாக வைக்கும். உழைத்து களைத்த மனிதன் இரவு தூக்கத்தில் மட்டுமே நிம்மதி அடைகிறான். உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை தூக்கம். ஆனால் தூங்குவதற்கு சிலர் பயப்படுகிறார்கள்; இந்த அதீத பயத்துக்கு ‘சோம்னி போபியா’ என்று பெயர். அதாவது தூக்கத்தின் போது ஏதாவது நடக்கும் என்ற பயம்.

  இதற்கான காரணம் பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பல காரணங்களால் தூக்கம் பற்றிய பயம் தோன்றலாம். கனவுகள் பற்றிய பயம், தூக்கத்தின்போது இறந்து விடுவோமா என்ற அச்சம், பேய்கள் பற்றிய பயம், தூக்கத்தில் நடப்பவர்கள், தூக்கத்தில் பேசுபவர்கள், தூக்கத்தில் பேசும் போது ரகசியங்களை கூறிவிடுவோமோ என்கிற கவலை என ஏராளமான காரணங்களால் பயம் கொள்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களுக்கு தூங்கினால் அவர்களை பேய் கொன்றுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம். அதனால் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கிறார்கள்.

  இன்னும் சிலருக்கு, இது சீசன் நோய் போலவும் வரும். அடுத்த நாள் தேர்வு என்றாலோ அல்லது அவர்கள் சந்திக்க விரும்பாத நிகழ்வு ஏதேனும் நடக்கவிருந்தாலோ முந்தைய நாள் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள். திகில் திரைப்படம் பார்ப்பவர்கள், மறைமுகமாக அல்லது எதிர்மறையான அதிர்ச்சிகரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நேசித்தவரின் இழப்பு ஆகியவையும் தூங்க விடாமல் செய்யும்.

  தூக்க பயத்திற்கான அறிகுறிகள் என்னவென்றால் பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை. இந்த பயமானது பாதிக்கப்பட்டவரின் தொழில் மட்டும் தனிப்பட்ட வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்பதால் உடனடியாக டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது. மேலும் தியானம் மற்றும் யோகா போன்றவை நல்ல தூக்கத்தை தரும். ஆழ்ந்த சுவாசம் மனதை நிதானப்படுத்தும். முறையான சிகிச்சையைவிட, அன்புக்குரியவர்கள் தரும் ஆதரவே இது போன்ற பயங்களுக்கு சரியான மருந்தாகும். தேவைப்பட்டால் மனநல சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.
  குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

  குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும். தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.

  சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். பால் குடித்து கொண்டே தூங்கிவிடும் குழந்தையை லேசாக கால் கட்டைவிரலை ஆட்டிவிட்டாலோ சுண்டிவிட்டாலோ குழந்தை மீண்டும் பால் குடிக்கும். பால், குழந்தைக்கு போதுமானதா எனத் தாய் கண்டறிந்த பின் குழந்தையை தூங்க விடலாம். சரியாக பால் குடிக்காத குழந்தைகள் பின் சீக்கிரமே பசிக்காக அழத் தொடங்கிவிடும்.

  * இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

  * தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

  * வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

  * குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

  * லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம்.

  * சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

  * மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும்.

  * குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம்.

  * ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி, நாப்கின்னை அணிந்து தூங்க வைத்தால் குழந்தை உடனே தூங்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் நம் மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.
  தொன்று தொட்டு நம் மூதாதையர்கள் பல சம்பிரதாயங்களைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

  அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும். பொதுவாக வடக்கிலே தலைவைத்துப் படுத்தால், வம்சம் விருத்தியடையாது என்பார்கள்.

  ஆனால் வடக்கிலே வாழை குலை தள்ளினால், வம்ச விருத்தி ஏற்படும். வாரிசு இல்லாத வீட்டில் வாரிசு உருவாக வழிபிறக்கும். தெற்கில் தலை வைப்பதும் அவ்வளவு நல்லதல்ல.

  கிழக்கு மற்றும் மேற்கு திசைகள் தான், தலைவைத்துப் படுத்துத் தூங்குவதற்கு ஏற்ற திசையாக ஆன்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர்.

  எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்குப் பக்கம் பார்த்து தலை வைத்துத் தூங்குவதே கீர்த்தியைத் தரும். காரணம் ராஜ கிரகமான சூரியன் உதிப்பது அந்த திசையில் தான்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இதயநோய் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் தூங்குவதாலும் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
  லண்டன்:

  ஜெர்மனியின் முனிச் நகரில் இதய நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் ஃபௌண்டாஸ் கூறுகையில், 10 லட்சம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட 11 ஆய்வுகள் மூலம் குறைவாக தூங்குவதால் இதயநோய் வருவது போன்று தொடர்ந்து அதிகமாக தூங்கினாலும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  மேலும், எந்த காரணிகளால் இதயம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய இன்னும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  தற்போதைய ஆய்வின்படி, குறைவாக தூங்குபவர்களுக்கு 11 சதவிகிதம் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகமாக தூங்குபவர்களுக்கு 33 சதவிகிதம் அதாவது 3 மடங்கு அதிகமாக இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.சி. அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
  இன்று பலரும் 10-க்கு 10 அடி அளவுகொண்ட சிறிய அறையில் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ஏ.சி. போட்டு தூங்குகிறார்கள். ஏ.சி. இல்லாதவர்கள் கூட கொசுக் கடிக்கு பயந்து கதவு ஜன்னல் எல்லாவற்றையும் சிக்கென்று அடைத்து தூங்குகிறார்கள். இப்படி தூங்கினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும்.

  பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது 10 சதவீதத்திற்கும் கீழே குறைந்து போகிறது. அப்படி குறையும்போது நுரையீரலால் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத நிலை ஏற்படும், இது தொடர்ந்தால் மனிதன் மூர்ச்சையாகி விடுவான். உடலில் உள்ள உயிர் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். அதனால் ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்யத் தொடங்கும்.

  அது நம் உடலில் உள்ள தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்யும். தண்ணீரில் இரு மடங்கு ஆக்ஜிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் உள்ளன. இந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது. அதனால்தான் சிறுநீரகத்தை மனிதனின் ‘இரண்டாவது நுரையீரல்‘ என்று அழைக்கிறார்கள்.

  சிறுநீரகம் இந்த வேலையை செய்யத்தொடங்கியவுடன் அதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலையை நிறுத்திவிடும். நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அது கழிவுநீராக மாறிவிடும். அந்த கழிவுநீரை வெளியேற்ற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். மீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.

  இந்த தள்ளாட்டத்தால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன், ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்களும் அதிகரிக்கின்றன. மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவமாக படிகிறது. சிறுநீரகத்திலும் இந்த படிமம் படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மூட்டு வலி தோன்றுகிறது.

  ஏ.சி. அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது இத்தனை உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் ‘காற்றுத்தீட்டு‘ என்று அழைத்தார்கள். அதனால் காற்று தீட்டு இல்லாத காற்றோட்டமான அறையில் தூங்குவோம். ஆரோக்கியத்தை பேணுவோம். சிறுநீரகத்தை காப்போம். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  தினமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரு நாள் 8 மணி, ஒரு நாள் 10 மணி, லீவு நாட்களில் 12 மணி என்று செல்லாதீர்கள். தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் கல்லீரலை சுத்தம் செய்கின்றன. செல்களை புதுப்பிக்கின்றன. தசைகளை வலுப்படுத்துகின்றது. கொழுப்பினை உடைக்கின்றது.

  ரத்தத்தில் சர்க்கரை அளவினை சீர் செய்கின்றது. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழ பழகுங்கள். அத்துடன் தினமும் 8-10 மணி நேரம் தூங்குங்கள். தூக்கம் வரவில்லை எனில் ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். சீக்கிரம் தூங்கி விடுவீர்கள்.

  * இரவு உணவினை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்ற அறிவுரையினை மருத்துவ உலகம் கூறுகின்றது. 7 மணிக்குள் உணவினை முடித்துக் கொண்டால் 9 மணிக்கு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது என பலர் கூறுகின்றனர்.  ஏதேனும் புரதமாக சிறிதளவு எடுத்துக் கொள்வது வயிறு நிறைவினை தரும். ஆரோக்யத்தினையும் அளிக்கும். சிறிதளவு பன்னீர் அல்லது சில பாதாம் கொட்டைகள் இவையே போதும். மாவு சத்து, சர்க்கரை சேர்ந்த உணவு கண்டிப்பாக வேண்டாம்.

  * தூங்குவதற்கு முன்னால் சில எளிய யோகாசனங்கள் செய்யலாம்.

  * குடல், உணவுப் பாதை நன்கு இருந்தால் உடல் சிறந்த ஆரோக்கியம் பெறும். எனவே அன்றாட உணவில் கொழுப்பில்லாத தயிர், மோர் இவற்றினை எடுத்துக் கொள்வதும் தூக்கத்திற்கு உதவும்.

  * கால்ஷியம், மக்னீசியம் இவை தேவையான அளவு உங்கள் உடலில் உள்ளதா என்பதை உங்கள் மருத்துவர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

  * வெந்நீரில் 1/2 எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவது இரவில் உடலினை ஆசிட் தன்மை இல்லாது  வைக்கும். ஆசிட் தன்மை இல்லாது இருந்தாலே உடல் தொந்தரவின்றி இருக்கும். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  இரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு அதுவே அவர் களின் தூக்கத்திற்கு தடையாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்டவர்கள் தலையணைக்குப் பதிலாக ஸ்மார்ட்போனை அணைத்துக்கொள்கிறார்கள். ஒருசிலர் மார்பில் வைத்துக்கொண்டும், தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டும் தூங்குகிறார்கள். இது நல்ல பழக்கம் அல்ல. தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளி கண்களில் உள்ள ரெட்டினாவை சேதப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் இரவு நேரங்களில் செல்போனில் வெளிப்படும் நீல நிற ஒளியின் அளவை குறைத்து வைப்பது அவசியமானது.

  இந்த நீல நிற ஒளி உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்கு படுத்தும் ஹார்மோன்களுக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். இரவு தூக்கம் தடைபடுவதால் சோர்வு மட்டுமல்ல இதய நோய், எடை அதிகரிப்பு, மன அழுத்தம், பதற்றம் உள்பட பல வகையான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இரவு நேரத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினரின் மனநலத்தை பாதிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  ஆஸ்திரேலியாவின் கிரிப்த் பல்கலைக்கழகமும், முர்டேக் பல்கலைக் கழகமும் இணைந்து 29 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8 முதல் 11 வயது நிரம்பிய 1100 மாணவ-மாணவிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரியவந்திருக்கிறது. ஆய்வின் முடிவில் இரவு நேரத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்கள் தூக்கமின்மை மற்றும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  ×