என் மலர்
அழகுக் குறிப்புகள்

முகத்திற்கும் தேங்காய் எண்ணெயை தடவிப் பாருங்கள்!
- தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.
- ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கமும்தான் உடலையும், அழகையும் பராமரிக்கும்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே. தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. ஆனால் அழகான, ஒளிரும், மென்மையான சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நம் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க உதவும் சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய்!
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் நன்கு உதவும். தேங்காய் எண்ணெய், சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கி, சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பு வழங்கி, ஆரோக்கியமான சரும அமைப்பை மேம்படுத்துகிறது. எண்ணெயை லேசாக சூடாக்கி, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். எண்ணெய் தடவி முகத்திற்கு மசாஜும் கொடுக்கலாம். மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவினால் வறண்ட சருமத்தினருக்கு நல்ல வித்தியாசம் தெரியும். முகம் மென்மையாக இருக்கும்.
கற்றாழை...
பளபளப்பான சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகும். கற்றாழை, முகப்பரு மற்றும் சுருக்கத்தை குறைக்கும். முகத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசையை நீக்கி, எப்போதும் முகத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் போதும். 3 நாட்களிலேயே மாற்றத்தை உணர்வீர்கள்.
அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே!
பால்...
பச்சைப்பாலில் காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைக்கவேண்டும். அப்போது முகத்தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளிகள் நீங்கி பளபளப்பான சருமம் கிடைக்கும்.
தேன்!
முகப்பரு, தழும்பு, முக வடுக்கள் உள்ளிட்டவற்றை தேன் குறைக்கும். சருமத்தை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். இளமையான தோற்றத்தை தக்கவைக்கும். தேனை அப்படியே எடுத்து கையால் முகத்தில் அப்ளை செய்து மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் ஒரு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவேண்டும்.






