என் மலர்
நீங்கள் தேடியது "smile"
- குழந்தையின் கனவில் நரி வந்து விளையாட்டு காட்டுமா?
- அனிச்சை போன்றது! வலிப்புத் தாக்கத்தால் கூட குழந்தை சிரிக்கக்கூடும்?
குழந்தை சிரிப்பை பார்த்தாலே நம் மனதில் ஒரு புன்னகை எழும். குழந்தைகள் சிரிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து புன்னகைப்போம். அவர்களின் சிரிப்பை ரசிப்போம். குழந்தை விழித்திருக்கும்போது சிரிப்பது சரிதான். ஆனால் தூங்கும்போதும் சிலநேரங்களில் சிரிப்பார்கள். இதனை பலரும் கவனித்திருப்போம். அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? தூங்கும்போது குழந்தை சிரிப்பதற்கான காரணம் என்னவென பலரும் யோசித்திருப்போம். அதற்கு பலரும் நரி கனவில் வந்து விளையாட்டு காட்டும் எனக்கூறுவார்கள். ஆனால் அதற்கான உண்மையான காரணத்தைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
மூன்று தூக்க நிலைகள்...
பெரியவர்கள், கனவில் நேர்மறையான விஷயங்கள் நடந்தால் சிரிப்பார்களாம். ஆனால் குழந்தை விஷயத்தில் அது உண்மையா என தெரியவில்லை. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. குழந்தையின் வயது, தூக்கத்தின் நிலையை பொறுத்து அவர்கள் சிரிப்பதற்கான காரணங்கள் மாறுபடும் எனக் கூறப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தூக்க சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளனவாம். அமைதியான தூக்கம், நிச்சயமற்ற தூக்கம் மற்றும் சுறுசுறுப்பான தூக்கம். சுறுசுறுப்பான தூக்கம் என்பது பெரியவர்களில் காணப்படும் விரைவான கண் அசைவு (REM) தூக்க நிலையைப் போன்றது. விரைவான கண் அசைவு தூக்கநிலையில் தூங்குபவர் தெளிவாக கனவு காணும் போக்கைக் கொண்டுள்ளனர்.
ஆனால் சுறுசுறுப்பான தூக்கத்திற்கும், REM தூக்கத்திற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சுறுசுறுப்பான தூக்கத்தின் போது குழந்தைகள் முடங்கிப் போவதில்லை. சுறுசுறுப்பான தூக்கத்தில் இருக்கும்போது, ஒரு குழந்தை நடுங்கலாம், உறிஞ்சும் அசைவுகளைச் செய்யலாம், கைகால்களை அசைக்கலாம், புன்னகைக்கலாம் அல்லது முகம் சுளிக்கலாம். தூக்கத்தின் போது குழந்தை சிரிப்பது அனிச்சை போன்றது என்று பழைய ஆராய்ச்சிகள் விவரித்துள்ளன. தூக்கத்தின்போது ஏற்படும் தன்னிச்சையான புன்னகைகள், புன்னகைக்கப் பயன்படுத்தப்படும் தசைகளை வளர்க்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க வலிப்புத் தாக்கமும் முக்கிய காரணமாக இருக்கலாம்
வலிப்புத் தாக்கம்...
பொதுவாக, ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கத்தால் (சிரிக்கும் வலிப்புத் தாக்கம்) ஒரு குழந்தை சிரிக்கக்கூடும். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கம் என்பது ஒரு வகை வலிப்புத் தாக்கமாகும். இது திடீரென சிரிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தூங்கும் தருவாயில் இருக்கும்போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்படலாம். தூக்கத்தின் போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்பட்டால், குழந்தை விழித்தெழுந்து, வலிப்பு முடிந்ததும் மீண்டும் தூங்கச் செல்லலாம். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கங்கள் 10 அல்லது 20 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். மேலும் அவை முகம் சுருங்குதல், முணுமுணுத்தல் அல்லது உதடுகளை அசைத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் ஏற்படலாம். பொதுவாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் முகபாவனைகள், ஒரு பெரியவரின் முகபாவனைகளைப் போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, எல்லா உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் வெளிக்காட்டமாட்டான். சில சூழல்களை புன்னகையுடன் கடப்பான். அதுபோல சில நேரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உண்மையில் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போதும் கூட சிரிப்பார்களாம். 1 வயதான குழந்தைகளிலும் கூட சிரிப்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வெளிப்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. 2 மாதம்வரை குழந்தைகள் தங்கள் முழு புன்னகையை வெளிப்படுத்தமாட்டார்கள். குழந்தைகள் நேரடியாக ஒருவரைப் பார்க்காமலேயே புன்னகைப்பார்கள். இது சாதரணமானது. ஆனால் குழந்தையுடன் அதிகம் இருப்பவர்கள் அதாவது அவர்களின் பெற்றோர்களோ அல்லது பராமரிப்பாளர்களோ அல்லது அவர்களை கவனித்து கொள்பவர்களோ சோகமாகவோ அல்லது மனசோர்வுடனோ இருந்தால் குழந்தைகள் குறைவாகவே சிரிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனால் முடிந்தவரை குழந்தை பராமரிப்பாளர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
- பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன.
- மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தமிழக பள்ளிக்கல்வித் துறையும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்க ளின் பற்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிகிச்சை குறித்து அறிவு றுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப் பட உள்ளது.
உத்தரவு
இந்த திட்டம், வரும் மாதங்களில் மாநிலம் முழு வதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி களில் ஏராளமானமாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த திட்டத் தின் மூலம் மாணவ, மாண வியருக்கு பல் பரிசோதனை களை செய்து அதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொது வான நோய்களான பல் சொத்தை, ஈறு போன்ற பிரச்சினை களுக்கு தீர்வு காணப்படும்.
மேலும் வாய் வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வும், தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
- மகிழ்ச்சிதான் வாழ்வின் பிரதான அங்கம்.
- புன்னகையில் வெளிப்படுவது மட்டுமே மகிழ்ச்சி அல்ல.
வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் ஒருசேர எதிர்கொள்ளும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும். மகிழ்ச்சிதான் வாழ்வின் பிரதான அங்கமாக இடம்பிடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். புன்னகையில் வெளிப்படுவது மட்டுமே மகிழ்ச்சி அல்ல. உள் மனம் நிம்மதியை அனுபவிப்பது வெளிப்பட வேண்டும். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...
* நன்றி உணர்வுடன் இருங்கள். ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறக்காதீர்கள். அதுபோல் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு தயங்காதீர்கள். மற்றவர் உதவி நாடி வந்தால் அவர் கேட்கும் முன்பே குறிப்பறிந்து உதவி செய்ய முன் வாருங்கள்.
* நன்றி உணர்வை கடைப்பிடிப்பது மனதை பூரிப்படைய செய்யும். பிறருக்கு செய்த உதவி பயனுள்ளதாக அமைவதை கண்கூடாக காணும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
* அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். உங்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளை தொடருங்கள். ஆர்வமுள்ள செயல்களில் ஈடுபடுவது மன திருப்தியை அளிக்கும்.
* எதிர்மறை சிந்தனைகள் மனதை ஆக்கிரமிப்பதற்கு இடம் கொடுக்காதீர்கள். மனதை திசை திருப்பும் செயல்களில் இருந்தும் விலகி இருங்கள். நேர்மறையான மன நிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். மனம் நிம்மதி அடைந்தாலே மகிழ்ச்சி எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.
* கடந்த கால நிகழ்வுகளையோ, நடந்து முடிந்த சம்பவங்களையோ திரும்பத்திரும்ப நினைவுக்கு கொண்டு வராதீர்கள். அது இறுக்கமான மனநிலைக்கு இட்டுச்செல்லும். நிம்மதியை தொலைத்து மகிழ்ச்சியை சீர்குலைத்துவிடும்.
* மன அழுத்தத்தைக் குறைக்கவும், நினைவாற்றல் திறனை மேம்படுத்தவும் தியானத்தில் ஈடுபடுங்கள். எதிர்மறை உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க இது உதவும்.
* குடும்பம், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவை வலுப்படுத்துங்கள். அவர்களுடனான பிணைப்பு உணர்வுப்பூர்வமானதாக அமையும் பட்சத்தில் மகிழ்ச்சியான மனநிலையை தக்கவைக்க துணைபுரியும்.
* குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலாவுக்கு திட்டமிடுங்கள். பயணங்கள் மனதை இலகுவாக்கும். சுற்றுலா இடங்கள் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக்கொடுக்கும். குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிக்க வழிவகை செய்யும்.
* சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். உடற்பயிற்சி, சீரான உணவுப்பழக்கம், போதுமான தூக்கம் என உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
* தெளிவான, அடையக்கூடிய, அர்த்தமுள்ள இலக்குகளை அமைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான இலக்குகளை பின்தொடர்வது வாழ்க்கையின் நோக்கத்தை பிரதி பலிக்க செய்யும். உள் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்க உதவும்.






