என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரிப்பு"

    • குழந்தையின் கனவில் நரி வந்து விளையாட்டு காட்டுமா?
    • அனிச்சை போன்றது! வலிப்புத் தாக்கத்தால் கூட குழந்தை சிரிக்கக்கூடும்?

    குழந்தை சிரிப்பை பார்த்தாலே நம் மனதில் ஒரு புன்னகை எழும். குழந்தைகள் சிரிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து புன்னகைப்போம். அவர்களின் சிரிப்பை ரசிப்போம். குழந்தை விழித்திருக்கும்போது சிரிப்பது சரிதான். ஆனால் தூங்கும்போதும் சிலநேரங்களில் சிரிப்பார்கள். இதனை பலரும் கவனித்திருப்போம். அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? தூங்கும்போது குழந்தை சிரிப்பதற்கான காரணம் என்னவென பலரும் யோசித்திருப்போம். அதற்கு பலரும் நரி கனவில் வந்து விளையாட்டு காட்டும் எனக்கூறுவார்கள். ஆனால் அதற்கான உண்மையான காரணத்தைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

    மூன்று தூக்க நிலைகள்...

    பெரியவர்கள், கனவில் நேர்மறையான விஷயங்கள் நடந்தால் சிரிப்பார்களாம். ஆனால் குழந்தை விஷயத்தில் அது உண்மையா என தெரியவில்லை. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. குழந்தையின் வயது, தூக்கத்தின் நிலையை பொறுத்து அவர்கள் சிரிப்பதற்கான காரணங்கள் மாறுபடும் எனக் கூறப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தூக்க சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளனவாம். அமைதியான தூக்கம், நிச்சயமற்ற தூக்கம் மற்றும் சுறுசுறுப்பான தூக்கம். சுறுசுறுப்பான தூக்கம் என்பது பெரியவர்களில் காணப்படும் விரைவான கண் அசைவு (REM) தூக்க நிலையைப் போன்றது. விரைவான கண் அசைவு தூக்கநிலையில் தூங்குபவர் தெளிவாக கனவு காணும் போக்கைக் கொண்டுள்ளனர்.

    ஆனால் சுறுசுறுப்பான தூக்கத்திற்கும், REM தூக்கத்திற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சுறுசுறுப்பான தூக்கத்தின் போது குழந்தைகள் முடங்கிப் போவதில்லை. சுறுசுறுப்பான தூக்கத்தில் இருக்கும்போது, ஒரு குழந்தை நடுங்கலாம், உறிஞ்சும் அசைவுகளைச் செய்யலாம், கைகால்களை அசைக்கலாம், புன்னகைக்கலாம் அல்லது முகம் சுளிக்கலாம். தூக்கத்தின் போது குழந்தை சிரிப்பது அனிச்சை போன்றது என்று பழைய ஆராய்ச்சிகள் விவரித்துள்ளன. தூக்கத்தின்போது ஏற்படும் தன்னிச்சையான புன்னகைகள், புன்னகைக்கப் பயன்படுத்தப்படும் தசைகளை வளர்க்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 


    குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க வலிப்புத் தாக்கமும் முக்கிய காரணமாக இருக்கலாம்

    வலிப்புத் தாக்கம்...

    பொதுவாக, ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கத்தால் (சிரிக்கும் வலிப்புத் தாக்கம்) ஒரு குழந்தை சிரிக்கக்கூடும். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கம் என்பது ஒரு வகை வலிப்புத் தாக்கமாகும். இது திடீரென சிரிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தூங்கும் தருவாயில் இருக்கும்போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்படலாம். தூக்கத்தின் போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்பட்டால், குழந்தை விழித்தெழுந்து, வலிப்பு முடிந்ததும் மீண்டும் தூங்கச் செல்லலாம். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கங்கள் 10 அல்லது 20 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். மேலும் அவை முகம் சுருங்குதல், முணுமுணுத்தல் அல்லது உதடுகளை அசைத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் ஏற்படலாம். பொதுவாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் முகபாவனைகள், ஒரு பெரியவரின் முகபாவனைகளைப் போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, எல்லா உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் வெளிக்காட்டமாட்டான். சில சூழல்களை புன்னகையுடன் கடப்பான். அதுபோல சில நேரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உண்மையில் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போதும் கூட சிரிப்பார்களாம். 1 வயதான குழந்தைகளிலும் கூட சிரிப்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வெளிப்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. 2 மாதம்வரை குழந்தைகள் தங்கள் முழு புன்னகையை வெளிப்படுத்தமாட்டார்கள். குழந்தைகள் நேரடியாக ஒருவரைப் பார்க்காமலேயே புன்னகைப்பார்கள். இது சாதரணமானது. ஆனால் குழந்தையுடன் அதிகம் இருப்பவர்கள் அதாவது அவர்களின் பெற்றோர்களோ அல்லது பராமரிப்பாளர்களோ அல்லது அவர்களை கவனித்து கொள்பவர்களோ சோகமாகவோ அல்லது மனசோர்வுடனோ இருந்தால் குழந்தைகள் குறைவாகவே சிரிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனால் முடிந்தவரை குழந்தை பராமரிப்பாளர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 

    • சமூகமே பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணியாக இருக்கிறது.
    • எல்லாவற்றிலும் சுதந்திரமாக இருக்கும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை.

    சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுவாள். எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள். எதாவது பேசிக்கொண்டே இருப்பாள் என பெண்ணை தங்கள் கணவன்மார்களோ அல்லது குடும்பத்தினரோ கூறுவர். இதனால் பெண் மிகவும் உணர்ச்சிமிக்கவள் என அனைவரிடமும் ஒரு பொதுக்கருத்து நிலவியுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. பெண்போல ஆணும் உணர்ச்சியுள்ளவனே. பாலினம் என்பதை பார்க்கமால் இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு குறிப்பிட்டு பார்க்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை உடனே வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் தாங்கள் 'ஆண்கள்', தங்களுக்கென்று சமூகத்தில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி உணர்ச்சிகளை அனைவரது முன்பும் வெளிப்படுத்தமாட்டர்கள். இதனாலேயே பெரும்பாலும் பெண்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என நாம் கூறுகிறோம். மேலும் இங்கு எதனால் பெண் உணர்ச்சிவசப்படுகிறாள் என்பதையும் கவனிக்க வேண்டும். பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை, சமூகம் அவர்களை செய்ய வைத்திருக்கும் வேலை, கலாச்சார எதிர்பார்ப்புகள் இவையனைத்துமே ஒரு பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.

    பாலினம்...

    குழந்தை, சிறுமி, இளம்பெண், மனைவி என ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் உணர்வுகளை வெவ்வேறு விதமாக வெளிக்காட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அவர்களாக இருக்க சமூகம் அனுமதிப்பதில்லை. இளம்பெண் என்றால் விளையாடக்கூடாது, இதுபோல உடையணியக்கூடாது, இதை செய்யக்கூடாது, இவர்களுடன் பேசக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள். தங்கள் சுதந்திரம் அனைத்தும் அடைக்கபடும்போது அந்த உணர்ச்சிகள் வேறுவிதமாக வெளிப்படும். இதற்கு நேர்மார் ஆண்களின் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் சுதந்திரம் பெறும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை. ஆண்கள் அழக்கூடாது என்பதுபோல. இதனால் பெண்கள் அதிக உணர்வுமயமானவர்கள் என்ற தோற்றம் ஏற்படுகிறது. 

    கலாச்சாரம்

    பெண்கள் என்றாலே சாந்தி. சாந்தமாக இருந்தால்தான் அவள் பெண். இல்லையென்றால் அடங்காப்பிடாரி, ராட்சசி, பொம்பளையா அவ என பல்வேறு பட்டங்கள். கலாச்சாரங்கள்படி பெண்கள் என்றால் அனுதாபம் கொள்ள வேண்டியவர்களாகவும், பாதுகாக்கப்படவேண்டியவர்களாகவும் காட்டப்படுகிறது. உணர்வுமயமாக இருப்பதுதான் பெண்களின் குணம் என்பதுபோல சித்தரிக்கப்படுகிறது. இப்படி இருந்தால்தான் அவள் பெண் என்ற பிம்பங்கள். கலாச்சாரத்தில் பெண்களுக்கு இருக்கும் சடங்குகளை ஒப்பிட்டால், ஆண்களுக்கு சடங்குகளே இல்லை. வயதுக்கு வந்தால் ஒரு சடங்கு, திருமணம் என்றால் ஒரு சடங்கு, குழந்தை தரித்தால் ஒரு சடங்கு, கணவன் இறந்தால் ஒரு சடங்கு இப்படி பெண்ணின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு சடங்கு. ஆனால் ஆண்களுக்கு இதுபோன்று எத்தனை சடங்குகள் உள்ளன? மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது என்றால் அந்தப் பெண்ணை சுற்றி அவ்வளவு பேர் இருப்பார்கள். மாதவிடாய் என்பது அப்போதுதான் அவளுக்கு முதலில் வந்திருக்கும். அதுகுறித்தே முழுதாக தெரியாமல் ஒருவித அச்ச, குழப்ப உணர்வில் இருப்பாள். எல்லோரும் தங்களை கொண்டாடுவதால் ஒரு சந்தோஷமும் இருக்கும்.


    பெண் தன் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள்!

    அப்போது விழா நடத்துகையில் உறவினர்கள் மத்தியில் தான் மட்டும் கவனிப்படுவது ஒரு கூச்ச சுபாவத்தை கொடுக்கும். இதனை வெட்கம் எனக்கூறுவது. ஒரு ஆணை 100 பேருக்கு மத்தியில் உட்காரவைத்து அவனை மட்டும் பார்த்தால் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வெட்கம்தான் வரும். அதுபோல வளையலணி விழா. தான் அம்மாவாகப்போவதை நினைத்து சந்தோஷத்துடன் பெண் இருப்பாள். ஆணும் அப்படித்தான் இருப்பான். ஆனால் பெண்ணுடைய உணர்வை மட்டும் இங்கு வெளிப்படுத்துவோம். அதுபோல இறப்பு சடங்கு. தன்துணை இறந்த சோகமே தாளாமல் இருக்கும்போது அவரை உட்காரவைத்து பூ, பொட்டு அழிப்பது. இது இன்னும் வலியை கொடுக்க அவள் அழுவாள். இப்படித்தான் இருபாலருக்கும் இருக்கும் உணர்வுகளை சமூகமே கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் சாத்துகிறது. அதுபோல பெண்ணை சகுனமாக சித்தரிப்பது, இவள் ராசியில்லாதவள், இவள் வந்தால் விளாங்காது, அப்பாவை விழுங்கியவள், கணவனை விழுங்கியவள் என்று... ஆனால் நாம் என்றுமே ஒரு ஆணை ராசியில்லாதவன் எனக் கூறியதே இல்லை. 

    அன்பு...

    அன்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெண் உடனே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவாள். சத்தமாக சிரிப்பது, பூரிப்படைவது, அன்பு கிடைக்காதபோது அதிகம் ஏங்குவது, உடைந்து அழுவது, கோபமாக கத்துவது என சூழ்நிலைக்கு ஏற்ப வெளிபடும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள். ஆனால் ஆண் எப்போதும் அனைத்து உணர்வுகளைவும் மனதுக்குள்ளேயே அடக்கிகொள்வான். வெகு சில நேரங்களிலேயே ஆண்கள் அழுவதை பார்க்கமுடியும். இதுபோன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிக உணர்ச்சிமிக்கவர்கள் எனக் கூறுகிறோம். ஆனால் ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது.   

    • மனிதன் வாழ் நாளில் 23 ஆண்டுகளை தூக்கத்திலேயே கழிக்கிறான்.
    • நாம் மறந்துவிட்ட விஷயங்களில் முக்கியமானது சிரிப்பு.

     தூக்கம்

    சராசரியாக மனிதன் வாழ் நாளில் 23 ஆண்டுகளை தூக்கத்திலேயே கழிக்கிறான். பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உறங்கும். 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தையின் தூக்க நேரம் 11 மணிகள். வளர வளர குழந்தையின் தூக்க நேரம் குறைந்து சராசரியாக 8 மணிநேரம் என்றாகிவிடும்.

    சிரிக்கப் பழகுங்கள்

    நவீன வாழ்க்கையில் நாம் மறந்துவிட்ட விஷயங்களில் முக்கியமானது சிரிப்பு. இந்தச் சிரிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு சொல்கிறது.

    தினமும் சிரியுங்கள்... அது உண்மையாக இல்லாமல் கூட இருக்கட்டும். அந்தச் சிரிப்பு உங்களின் மூளைக்கு மகிழ்ச்சியை ஊட்டி புத்துணர்வை அளிக்கும். உங்களை எனர்ஜியுடன் செயல்பட வைக்கும்.

    ''பல வருடங்களாக நடந்த ஆய்வுகளுக்குப் பிறகு ஒரு விஷயம் வெளிப்பட்டிருக்கிறது. உங்களின் சூழல் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் சிரியுங்கள். அந்தச் சிரிப்பு பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை.

    சிரிப்பின் போது முகத்தில் நிகழ்கின்ற அதிர்வுகள் நேர்மறையான சமிக்ஞையை மூளைக்கு அனுப்புகின்றன. அது சிரிப்புக்கு முன் இருந்த மனநிலையைவிட சிறந்ததாக இருக்கிறது...'' என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவரான சாகர்.

    இதுமட்டுமல்ல, சிரிப்பு உங்களின் மன உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது என்பது இதில் ஹைலைட்.

    • சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
    • ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.

    தற்போதைய நவீன, அவசர உலகத்தில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் குறைப்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் நாம் ஆரோக்கியமன மனநிலையில் வாழ முடியும். சிரிப்பதால் நமது ரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து புத்துணர்ச்சியை உண்டாக்கும் எண்டோர்பின் கெமிக்கல் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சிரிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

    சமீபத்தில் ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் மேற்கொண்டு அறிவியல் ஆய்வில் தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயங்கள் குறைவதாக தெரிய வந்துள்ளது. மேலும் சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து யமகட்டா மாகாணத்தில் தினசரி அனைவரும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதத்தில் எட்டாவது நாளையும் சிரிப்பு தினமாக கடைபிடித்து அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டாய சட்டத்தை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சிரிப்பது என்பது தனிநபர் உரிமை சார்ந்தது என்றும், அதை கட்டாயப்படுத்தி செய்ய சொல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

    ×