என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார நிபுணர்கள்"

    • சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
    • சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.

    தினமும் சிறிது நேரம் சத்தமாக சிரிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சிரிப்பு உடனடியாக மன நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

    சத்தமாக சிரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை அதிகரிக்கும் ஒரு எளிய பயிற்சியாகும். சத்தமாக சிரிப்பது நீண்ட ஆயுளுக்கு பெரிதும் உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

    சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது.

     

    நேர்மறையான, மகிழ்ச்சியான மன நிலையைப் பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.

    பின்னர் தசைகள் தளர்ந்து, இரத்த அழுத்தம் குறைகிறது. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. சத்தமாக சிரிப்பது உதரவிதானம் மற்றும் நுரையீரலை செயல்படுத்துகிறது. இது ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது. மனம் அமைதியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். கலகலவென கண்ணில் நீர்வர சிரிப்போம்.

    • இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்பிபி1.16 வகை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது.
    • தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதால் புதிய வகை பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இதற்கு எக்ஸ்பிபி1.16 என்ற உருமாறிய தொற்றின் எழுச்சிதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்பிபி1.16 வகை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது.

    தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் எக்ஸ்பிபி1.16 மாறுபாட்டில் பரவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிபி1.16 வகை கொரோனா பாதிப்புகளை அதிகரிக்க செய்கிறது. ஆனால் இந்த வகை தொற்றால் ஆபத்து தீவிரமாக இல்லை என கொரோனா வைரஸ் குறித்தும் அதன் உருமாற்றம் குறித்தும் ஆய்வு செய்யும் ஆய்வுக் கூடங்களின் கூட்டமைப்பான இன்சகாக்கின் இணை தலைவர் டாக்டர் சவுமித்ரா தாஸ் தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், இதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்ள எங்களிடம் போதுமான தரவுகள் இல்லை. பெரும்பாலான இந்தியர்களிடம் தற்போது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

    மேலும் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதால் புதிய வகை பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனால் தொற்றின் தீவிரத்தை எளிதாக கருதமுடியாது என்றார்.

    இதே போல ஜெனோ மிக்ஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர் வினோத் ஸ்காரியா கூறுகையில், எக்ஸ்பிபி1.16 வகையால் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளில் இருந்து புதிய மாறுபாடு தப்பிக்கலாம் என்றார்.

    சமீபத்திய புள்ளி விபரங்களின்படி மகாராஷ்டிரா, கேரளா, குஜராத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகிறது.

    இந்த 3 மாநிலங்கள் மற்றும் தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடாகவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் இம்மாநி லங்களில் பரிசோதனையை அதிகரிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் தொடர் கண்காணிப்பை தீவிரப்படுத்து மாறும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை பின்பற்று மாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    ×