என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்கள்-பெண்கள்"

    • சமூகமே பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணியாக இருக்கிறது.
    • எல்லாவற்றிலும் சுதந்திரமாக இருக்கும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை.

    சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுவாள். எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள். எதாவது பேசிக்கொண்டே இருப்பாள் என பெண்ணை தங்கள் கணவன்மார்களோ அல்லது குடும்பத்தினரோ கூறுவர். இதனால் பெண் மிகவும் உணர்ச்சிமிக்கவள் என அனைவரிடமும் ஒரு பொதுக்கருத்து நிலவியுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. பெண்போல ஆணும் உணர்ச்சியுள்ளவனே. பாலினம் என்பதை பார்க்கமால் இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு குறிப்பிட்டு பார்க்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை உடனே வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் தாங்கள் 'ஆண்கள்', தங்களுக்கென்று சமூகத்தில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி உணர்ச்சிகளை அனைவரது முன்பும் வெளிப்படுத்தமாட்டர்கள். இதனாலேயே பெரும்பாலும் பெண்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என நாம் கூறுகிறோம். மேலும் இங்கு எதனால் பெண் உணர்ச்சிவசப்படுகிறாள் என்பதையும் கவனிக்க வேண்டும். பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை, சமூகம் அவர்களை செய்ய வைத்திருக்கும் வேலை, கலாச்சார எதிர்பார்ப்புகள் இவையனைத்துமே ஒரு பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.

    பாலினம்...

    குழந்தை, சிறுமி, இளம்பெண், மனைவி என ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் உணர்வுகளை வெவ்வேறு விதமாக வெளிக்காட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அவர்களாக இருக்க சமூகம் அனுமதிப்பதில்லை. இளம்பெண் என்றால் விளையாடக்கூடாது, இதுபோல உடையணியக்கூடாது, இதை செய்யக்கூடாது, இவர்களுடன் பேசக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள். தங்கள் சுதந்திரம் அனைத்தும் அடைக்கபடும்போது அந்த உணர்ச்சிகள் வேறுவிதமாக வெளிப்படும். இதற்கு நேர்மார் ஆண்களின் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் சுதந்திரம் பெறும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை. ஆண்கள் அழக்கூடாது என்பதுபோல. இதனால் பெண்கள் அதிக உணர்வுமயமானவர்கள் என்ற தோற்றம் ஏற்படுகிறது. 

    கலாச்சாரம்

    பெண்கள் என்றாலே சாந்தி. சாந்தமாக இருந்தால்தான் அவள் பெண். இல்லையென்றால் அடங்காப்பிடாரி, ராட்சசி, பொம்பளையா அவ என பல்வேறு பட்டங்கள். கலாச்சாரங்கள்படி பெண்கள் என்றால் அனுதாபம் கொள்ள வேண்டியவர்களாகவும், பாதுகாக்கப்படவேண்டியவர்களாகவும் காட்டப்படுகிறது. உணர்வுமயமாக இருப்பதுதான் பெண்களின் குணம் என்பதுபோல சித்தரிக்கப்படுகிறது. இப்படி இருந்தால்தான் அவள் பெண் என்ற பிம்பங்கள். கலாச்சாரத்தில் பெண்களுக்கு இருக்கும் சடங்குகளை ஒப்பிட்டால், ஆண்களுக்கு சடங்குகளே இல்லை. வயதுக்கு வந்தால் ஒரு சடங்கு, திருமணம் என்றால் ஒரு சடங்கு, குழந்தை தரித்தால் ஒரு சடங்கு, கணவன் இறந்தால் ஒரு சடங்கு இப்படி பெண்ணின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு சடங்கு. ஆனால் ஆண்களுக்கு இதுபோன்று எத்தனை சடங்குகள் உள்ளன? மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது என்றால் அந்தப் பெண்ணை சுற்றி அவ்வளவு பேர் இருப்பார்கள். மாதவிடாய் என்பது அப்போதுதான் அவளுக்கு முதலில் வந்திருக்கும். அதுகுறித்தே முழுதாக தெரியாமல் ஒருவித அச்ச, குழப்ப உணர்வில் இருப்பாள். எல்லோரும் தங்களை கொண்டாடுவதால் ஒரு சந்தோஷமும் இருக்கும்.


    பெண் தன் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள்!

    அப்போது விழா நடத்துகையில் உறவினர்கள் மத்தியில் தான் மட்டும் கவனிப்படுவது ஒரு கூச்ச சுபாவத்தை கொடுக்கும். இதனை வெட்கம் எனக்கூறுவது. ஒரு ஆணை 100 பேருக்கு மத்தியில் உட்காரவைத்து அவனை மட்டும் பார்த்தால் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வெட்கம்தான் வரும். அதுபோல வளையலணி விழா. தான் அம்மாவாகப்போவதை நினைத்து சந்தோஷத்துடன் பெண் இருப்பாள். ஆணும் அப்படித்தான் இருப்பான். ஆனால் பெண்ணுடைய உணர்வை மட்டும் இங்கு வெளிப்படுத்துவோம். அதுபோல இறப்பு சடங்கு. தன்துணை இறந்த சோகமே தாளாமல் இருக்கும்போது அவரை உட்காரவைத்து பூ, பொட்டு அழிப்பது. இது இன்னும் வலியை கொடுக்க அவள் அழுவாள். இப்படித்தான் இருபாலருக்கும் இருக்கும் உணர்வுகளை சமூகமே கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் சாத்துகிறது. அதுபோல பெண்ணை சகுனமாக சித்தரிப்பது, இவள் ராசியில்லாதவள், இவள் வந்தால் விளாங்காது, அப்பாவை விழுங்கியவள், கணவனை விழுங்கியவள் என்று... ஆனால் நாம் என்றுமே ஒரு ஆணை ராசியில்லாதவன் எனக் கூறியதே இல்லை. 

    அன்பு...

    அன்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெண் உடனே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவாள். சத்தமாக சிரிப்பது, பூரிப்படைவது, அன்பு கிடைக்காதபோது அதிகம் ஏங்குவது, உடைந்து அழுவது, கோபமாக கத்துவது என சூழ்நிலைக்கு ஏற்ப வெளிபடும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள். ஆனால் ஆண் எப்போதும் அனைத்து உணர்வுகளைவும் மனதுக்குள்ளேயே அடக்கிகொள்வான். வெகு சில நேரங்களிலேயே ஆண்கள் அழுவதை பார்க்கமுடியும். இதுபோன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிக உணர்ச்சிமிக்கவர்கள் எனக் கூறுகிறோம். ஆனால் ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது.   

    • நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
    • போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.

    முதல் நாளில் ஆண்களு க்கான போட்டியும், 2-வது நாளில் பெண்களுக்கான போட்டியும் நடைபெறுகிறது.

    அதேப்போல் ஆண்களுக்கான கால்பந்து போட்டி 20-ந் தேதியும், பெண்களுக்கான கால்பந்து போட்டி 26-ந் தேதியும் நடக்கிறது. ஆண்களுக்கான கபடி போட்டி 26-ந்தேதியும், பெண்களுக்கான கபாடி போட்டி 27-ந் தேதியும் நடக்கிறது.

    போட்டிகள் காலை 8 மணி முதல் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    ஆண்கள், பெண்க ளுக்கான கபடி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். கால்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    கைப்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல் அவசியம் கொண்டு வர வேண்டும். இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனபெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு நடக்கிறது.
    • மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெற உள்ள பிரம்மாண்டமான 44-வது பைடு செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் 15 வயதிற்குட்பட்ட மாணவமாணவிகள் பங்கு பெறலாம். இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் எனமொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். போட்டியில் பங்கு பெறமுன்பதிவு அவசியம். ஆண்களுக்கு 25 பரிசுகளும், பெண்களுக்கு 25 பரிசுகளும்வழங்கப்பட உள்ளது.பதிவு செய்வதற்கான நடைமுறைhttps://prs.aicf.in/new-register https://forms.gle/vSoQM34D6TMtokUi9தங்கள் பதிவை உறுதி செய்ய 8012568392 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    ×