என் மலர்
பொது மருத்துவம்

ஆற்றல் தரும் தூக்கம்
- போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.
- கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.
நன்றாக தூங்கி எழும்போது உடலில் ஒருவித புத்துணர்வு கிடைக்கும். அதே வேளையில், போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.
இதுசம்பந்தமாக சர்வதேச அமைப்பு ஒன்று இளம் வயது ஆண், பெண்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், தூங்கச்செல்லும் நேரம், விழிக்கும் நேரம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 3 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு முடிவில், குறைந்தபட்சம் 7 மணி நேரத்திற்கு மேலாக தூங்கிய குழுவில் இருந்தவர்களின் உடல் நிலை மிகவும் சிறப்பாக இருந்ததும், இவர்களின் இதய துடிப்பு மிகவும் சீராக இருந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் அன்றாட வாழ்வில் படிப்பு, புதிய சொற்களின் அர்த்தம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை சுலபமாக எதிர் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இத்துடன், கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.
எனவே, இளம் வயதினர் போதிய உடல் மற்றும் மன வளர்ச்சியை இயற்கையாக பெற இளம் வயது பருவத்தில் எக்காரணம் கொண்டும் தூக்கத்தை இழக்காமல் போதிய நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கி நன்கு தூங்கி எழ வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.






