என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qatar PM"

    • வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்.
    • அப்போது மத்திய கிழக்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    வாஷிங்டன்:

    மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காசா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

    இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து விருந்து அளித்துள்ளார்.

    அதன்படி, பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஆகியோரை தனித்தனியாக டிரம்ப் சந்தித்து விருந்து அளித்தார்.

    ஏற்கனவே தனது 2-வது பதவிக் காலத்தின்போது சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். இதன்மூலம் காசா போரில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.

    தற்போதைய இந்தச் சந்திப்பின்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, அமெரிக்க ஜெட் விமானங்கள், கணினி சேவையகங்கள், அலுமினிய உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

    அதேபோல், அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின்னுடன் ஆலோசிக்கப்பட்டது.

    • பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும், பலர் ஹமாஸ் வசம் உள்ளனர்
    • பெய்ரூட்டில் ஹமாஸின் முக்கிய தலைவர் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்

    கடந்த 2022 அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200க்கு மேற்பட்டவர்களை கொன்று, சுமார் 240 பேர்களை பணயக்கைதிகளாக கொண்டு சென்றது.

    இதற்கு பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்த இஸ்ரேல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள் நிறைந்திருக்கும் பகுதியான பாலஸ்தீன காசா மீது போர் தொடுத்தது.

    85 நாட்களை கடந்து நடைபெறும் இப்போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட பல நாடுகள் முயற்சித்தாலும், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதில் தீவிரமாக உள்ளது.

    பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும் பலர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர்.

    கடந்த செவ்வாய் அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவரான சலே அல் அரவ்ரி (Saleh al-Arouri) மற்றும் பல தலைவர்கள் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது என நம்பப்படுகிறது.

    இதனால், கத்தார் மற்றும் எகிப்து மூலம் இஸ்ரேலுடன் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஹமாஸ் விலகி விட்டது.

    இப்பின்னணியில், கத்தார் பிரதமர் மொஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி (Mohammed bin Abdulrahman Al Thani), நேற்று தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அவர்களிடம், "பணய கைதிகளின் குடும்பத்தினரின் துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பெய்ரூட் நகர தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமாக உள்ளது" என அல் தனி தெரிவித்தார்.

    ×