என் மலர்

  நீங்கள் தேடியது "valentines day"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். #ValentinesDay

  ராயபுரம்:

  உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுலா தளங்களில் காதல் ஜோடிகள் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டத் தில் ஈடுபட்டன.

  கொருக்குப்பேட்டை மன்னப்ப தெருவில் தர்ம ரக்ஷா சபா சார்பில் அதன் மாநில தலைவர் செல்வம் உள்பட 3 பேர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். அப்போது நாய் ஒன்றுக்கு செல்வம் தாலி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவர் தாலி கட்டியது ஆண் நாய் என்பதை தெரிந்ததும் அப்பகுதி மக்கள் இடையே சிரிப்பலை எழுந்தது.

  இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து செல்வம் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

  காதலர் தினத்துன்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் எறும்புக்காடு சந்திப்பில் இந்து மகா சபா சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

  நாற்காலிகளில் 2 நாய்களை அமர வைத்து அதற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் திருமணம் போலவே புது ஆடைகள், வளையல்கள், பூக்களை தட்டில் வைத்திருந்தனர். மாலை மாற்றி நாய்களுக்கு திருமணம் செய்ததும், பூக்களை தூவினார்கள். மேலும் நாய்களுக்கு பால், பழமும் ஊட்டப்பட்டது.

  ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வரும் காதல் ஜோடிகளை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம். காதலர்களை விரட்டுவோம்”என்று கோ‌ஷமிட்டனர். #ValentinesDay

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோபியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணியினர் ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணத்தை நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #ValentinesDay
  கோபி:

  இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் நினைவு பரிசுகளை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

  இந்த காதலர் தினத்துக்கு இந்து முன்னணி சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு நூதனப்போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

  ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு காதலர் தினத்தன்று ஏராளமான காதலர்கள் ஜோடி-ஜோடியாக வருவார்கள்.

  அவர்களை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் சிலர் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம் காதலர்களை விரட்டுவோம்”என்று கோ‌ஷமிட்டனர்.

  இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்து முன்னணியினரின் போராட்டத்தால் கொடிவேரி அணைக்கு வந்த காதல் ஜோடியினர் ஜகா வாங்கினர். அவர்கள் சென்ற பிறகு இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு சென்றனர். காதல் மொழி பேசி மகிழ்ந்தனர். #ValentinesDay
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதல் தியாகத்தின் அடையாளம், விட்டுக்கொடுத்தலின் அடையாளம். உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைத்து உயர்ந்த காதலை அவரவர் உள்ளங்களில் கொண்டாடுவோம். #ValentinesDay
  இன்று (பிப்ரவரி 14-ந் தேதி) உலக காதலர் தினம்.

  காதல்... உதடுகளால்கூட எச்சில்படுத்திவிட முடியாத அழகான வார்த்தை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை காதலைப் பற்றி எழுதப்படாத இலக்கியங்கள் இல்லை. திருக்குறளின் இன்பத்துப்பாலை விட யாரால் காதலை உயர்வாகச் சொல்லிவிட முடியும்?

  தலைவன் தலைவியைப் பார்த்து, யான் நோக்கும் போது நிலம் நோக்குகிறாய், நான் நோக்காத போது நீ எனை நோக்குகிறாய் என்று சொன்னார் வள்ளுவர். அன்புடைய நெஞ்சங்கள் ஒன்றாகக் கலப்பதை செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல என்று குறுந்தொகை இலக்கியம் முன்வைத்தது. மகாகவி பாரதி, “உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று சொல்லி, “காதல் காதல் காதல் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்” என்று பாடினார்.

  சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியாரின் அற்புத வரிகள் தமிழ்க் காதலின் சான்றுகள், தமிழின் அடையாளமாகத் திகழும் தொல்காப்பியம், தமிழரின் வாழ்வை களவு வாழ்க்கை என்றும், கற்பு வாழ்க்கை என்றும் அழகாகப் பிரித்துக்காட்டுகிறது. ஆனால் இன்று காதல் அதே உன்னதத்தோடு இருக்கிறதா? அன்பர்கள் தினம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பிப்ரவரி 14-ந் தேதியை வேலன்டைன் தினம் எனும் காதலர் தினமாக உலகநாடுகள் கொண்டாடத் தொடங்கின. உலகநாடுகள் முழுக்க வாழ்த்து அட்டைகளால் தங்கள் அன்பைத் தெரியப்படுத்தியதைப் பல இலக்கியக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. வெளிநாடுகளைப் பார்த்து எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நாம், எது உண்மைக் காதல் என்று வரையறுக்காமல் காதலர் தினத்தையும் அப்படியே இறக்குமதி செய்துகொண்டோம்.

  கண்டதும் காதல், வாட்ஸ்-அப் காதல், முகநூல் காதல், டுவிட்டர் காதல், பொழுதுபோக்குக் காதல் என்று பல்வேறு காதல்களாய் உருப்பெற்று ஒரு பிப்ரவரியில் மலர்ந்து, அடுத்த பிப்ரவரியில் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் நின்று விவாகரத்து மனுவைத் தந்துகொண்டிருக்கும் நிலையைக் கண்டுகொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பின் ஆதாரமாகத் திகழும் காதல், வேறுவேறு வடிவங்களில் இன்று விஸ்வரூபம் எடுத்து நம் குடும்பங்களைக் கண் எதிரே குலைத்துக் கொண்டிருப்பதை அன்றாடச் செய்தித்தாள்களின் செய்திகளிலிருந்து கண்கூடாய்க் கண்டுகொண்டிருக்கிறோம்.

  இருவரின் மனம் தொடர்பான காதல் இன்று சமூகத்தின் போக்கால் மடைமாற்றம் செய்யப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்படும் கொண்டாட்டச் செய்தியாய் மாறியுள்ளது. தங்க ஊசி கையில் இருக்கிறது என்பதற்காக நம் கண்களைக் குத்திக்கொள்ள முடியுமா? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பதின் பருவத்து பிள்ளைகள் காதலர் தினம் என்ற பெயரில் படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்கள் எதிர்கால வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

  வீக்கத்தை வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ள இயலுமா? எது காதல்? எது காதல் இல்லை என்பது பெரும்பாலும் வாழ்வைத் தொலைத்த பின் தான் இருபாலருக்கும் தெரிகிறது. காதல் தோல்விகள் இளையோரின் உயிரைக் குடிக்கும் செயலாக மாறும்போது சமூகம் சங்கடப்படுகிறது. ஒன்றுபட்ட அன்புடைய இரு உள்ளங்கள் கலப்பதை சங்கத்தமிழர்கள் அகம் என்று சொன்னார்கள், அதாவது இருவரின் உள்ளம் சார்ந்த செயல் என்று சொன்னார்கள். ஆனால் காதல் என்ற பெயரில், சம்பந்தமே இல்லாத பெண்களின் வாழ்வில் விளையாடும் கொடூரங்களைக் கண்டபின்னும் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இனியும் நம் தமிழ் மண்ணில் நிகழவேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது.  உலகம் வாழ்த்து அட்டைகளால் காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன்னால், தமிழ் மண்ணில் காதலே பூக்கவில்லையா? எல்லாவற்றையும் இலைமறை காயாய் கற்றுத்தந்த மண் தமிழ்மண். எல்லாருக்கும் தெரிய வெளிப்படையாகச் சொல்வதா காதல்? பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன், “பட்டணத்துக் காதலப்பா பாதியிலே மறையுமப்பா! பட்டிக்காட்டுக் காதலுக்குக் கெட்டியான உருவமப்பா” என்று பாடியதை மனம் நினைத்துப் பார்க்கிறது.

  எல்லோர் முன்னிலையிலும் விரும்பவில்லை என்று சொன்னதற்காக முகத்தில் அமிலம் வீசிக் கொல்லப்பட்ட இளம்பெண்களின் வரலாறுகள், தான் காதலித்த பெண் தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாள் என்பதற்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்களின் இறப்புகள் நம்மை வெகுவாகச் சங்கடப்படுத்துகின்றன. ஏதோவொரு திரைப்படத்தில் வந்துவிட்டது என்பதற்காகத் திரைப்படத்தின் மாய பிம்பங்களைப் போல் தன்னையும் மாற்றிக்கொண்டு தொடர்பே இல்லாத அப்பாவிப் பிள்ளைகளின் வாழ்வை அவர்களின் எதிர்காலத்தை நசுக்கிப் போடுவோரை காதலர் தினம் என்ற பெயரில் ஏன் நாம் கொண்டாடவேண்டும்?

  எதிர்பாலினத்தைக் காதலுக்குரிய பிம்பமாக மட்டும் அறிவார்ந்த சமூகம் பார்க்கவேண்டுமா? ஆண்,பெண் அன்பின் உன்னத அடையாளமாய் திகழ்ந்த காதல் இன்று தடம்மாறி சமூகத்தின் குடும்ப உறவுகளைக் குலைக்கும் அளவு செல்லும் நாளில் அதை நேர்வழிப்படுத்துவது கடமையாகும்.

  மிக நளினமாக இலைமறை காயாய் வெளிப்படுத்தப்பட்ட காதல் இன்று அப்பட்டமாய் பொதுவெளியில் வெளிப்படையாக வெளிப்படுத்தப்படுகிறது. உள்ளத்தின் அன்பு காதல், மாசுமருவற்ற பாசம் காதல், எதிர்பாலினத்தை மதிப்பது காதல், செய்யும் தொழிலை நேசிப்பது காதல், அழகு பார்த்து மட்டும் வருவதல்ல காதல், மனதின் உண்மை முகம் பார்த்து வருவதுதான் உண்மைக் காதல்.

  கண்டதே காதல் கொண்டதே கோலம் என்பதல்ல காதல், ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பின் வருவதே உண்மைக்காதல். மோதலில் தொடங்கி காதலில் நிறைவுற வாழ்க்கை ஒன்றும் மூன்று மணிநேரத் திரைப்படம் இல்லை. காதல் தியாகத்தின் அடையாளம், விட்டுக்கொடுத்தலின் அடையாளம். உயர்ந்த இல்லறத்தின் அடையாளம். உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைத்து உயர்ந்த காதலை அவரவர் உள்ளங்களில் கொண்டாடுவோம்.

  முனைவர் சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலர் தினத்தை முன்னிட்டு 2½ கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ. 100 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாகவும் விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். #ValentinesDay
  ஓசூர்:

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, பேரிகை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பசுமை குடில் அமைத்து ரோஜா சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக பேரிகை பகுதியில்தான் அதிகளவில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல கர்நாடக விவசாயிகளும் நிலங்களை குத்தகைக்கு எடுத்து ரோஜா சாகுபடி செய்தனர்.

  இந்த ஆண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் ரோஜா உற்பத்தியில் ஆர்வம் காட்டினர். இந்த தொழிலில் 2 லட்சம் பேர் ஈடுபட்டனர்.

  சாகுபடி செய்யப்பட்ட ரோஜாக்களை அந்தந்த நிலங்களுக்கே வந்து தனியார் நிறுவன அதிகாரிகள் கொள்முதல் செய்து சென்றனர். இதனால் இந்த ஆண்டு ரோஜா ஏற்றுமதி அதிகளவில் இருந்தது.

  துபாய், குவைத், ஆஸ்திரேலியா, லெபனான், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ரோஜா பூக்கள் அனுப்பப்பட்டன. குறிப்பாக காதலர்கள் விரும்பிய தாஜ்மகால் என்று அழைக்கப்படும் சிகப்பு ரோஜா சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டினர்.

  தாஜ்மகால், டோராக்ஸ், நோப்ளாஸ், கார்னியா, பர்னியர், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலாஞ்ச், கார்பெட், டிராபிக்கள் அமேசான், பர்ஸ்ட்டு ரெட், கிராம் காளா உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜா மலர்கள் காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.

  இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகம் இருந்தாலும், பசுமை குடிலை சுற்றி பனி பெய்யாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் 2½ கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ. 100 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாகவும் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

  வழக்கமாக மற்ற நாட்களில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு பஞ்ச் ரூ. 20 முதல் ரூ. 50 வரை விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு உள்ளூரிலேயே 20 ரோஜா மலர்கள் கொண்ட பஞ்ச் ரூ.300 வரை விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு அனுப்பிய ரோஜாக்களால் இந்த ஆண்டு கூடுதல் விலை கிடைத்ததாகவும், ஒரு ரோஜா பூ ரூ. 25 வரை விலை போனதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

  கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மராட்டியம் உள்ளிட்ட இதர மாநிலங்களுக்கும் இந்த ஆண்டு ரோஜா அனுப்பி அதன் மூலம் ரூ. 5 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். #ValentinesDay
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது. #ValentinesDay
  ஓசூர்:

  வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்துக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த ரோஜாவுக்கு அதிக கிராக்கி உண்டு. குறிப்பாக சிவப்பு நிற ரோஜாக்களை வெளிநாட்டு காதலர்கள் வாங்கி தங்களது காதலிகளுக்கு கொடுப்பது வழக்கம்.

  இந்த ஆண்டு ஒரு கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டப்பயிர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:-

  ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமைக்குடிலில் விளையும் ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

  தாஜ்மகால் எனப்படும் சிவப்பு ரோஜா மலருக்கு அரபு நாடுகளில் அதிக வரவேற்பு காணப்படுகிறது.

  இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு வெளிநாடுகளுக்கு 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மலர் சாகுபடி நடைபெற்றது. ஆனால் நடப்பாண்டில் அதிக பனிப்பொழிவு காரணமாக ரோஜா உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால், ஏற்றுமதி இலக்கு ஒரு கோடியாக குறைந்துவிட்டது.

  பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்துக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி பணிகள் கடந்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி தொடங்கியது. வரும் 10-ந்தேதி வரை பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

  ஓசூரில் இருந்து ரோஜா மலர்கள் பேக்கிங் செய்யப்பட்டு பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இன்றுவரை 60 சதவீதம் ஏற்றுமதி பணிகள் முடிந்து உள்ளன.

  ஒரு ரோஜா மலரின் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ஓசூரில் இருந்து ரோஜாக்கள் ஏற்றுமதி செய்வது போல ஊட்டியில் இருந்து கார்னேசன் மலர்கள் காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த திருச்சிகடி, கக்கூஜி, தும்மனட்டி, மைநிலை, கொடநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டு மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கார்னேசன், தர்புரா, அஷ்டமரியா ஆகிய மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வெளிநாடு களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.  குறிப்பாக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற மலர்கள் தான் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. காதலை சொல்லும் நிறமாக இந்த 3 நிறங்களும் இருப்பதால் இந்த மலர்களுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது.

  இதுகுறித்து மலர் உற்பத்தியாளர் அனுசியா சுந்தர் கூறியதாவது:-

  சிவப்பு நிற கார்னேசன் மலர் காதலை சொல்வதற்கு ஒரு சிறந்த மலர் ஆகும். இதனால் அதற்கு மிகுந்த கிராக்கி உண்டு. மிகக்குறைந்த விலையில் அந்த கர்னேசன் மலர் கிடைப்பதால் காதலர்கள் இந்த மலரை வாங்கி காதல் பரிசாக அளிக்கிறார்கள். இந்த கார்னேசன் மலர்கள் ஊட்டியில் இருந்து சென்னை, பெங்களூரு, பூனே ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

  இந்த கார்னேசன் மலர் ஊட்டியில் அதிக அளவில் பயிரிடப்படுவதால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார். #ValentinesDay
  ×