மௌனம் பேசியதே முதல் மின்னலே வரை.. காதலர் தினத்தை ஒட்டி ரீ-ரிலீஸ் ஆன கிளாசிக் படங்கள்!

கிளாசிக் காதல் படமான 'காதலர் தினம்' படமும் ரீ ரிலீஸ் ஆகிறது.
மௌனம் பேசியதே முதல் மின்னலே வரை.. காதலர் தினத்தை ஒட்டி ரீ-ரிலீஸ் ஆன கிளாசிக் படங்கள்!
Published on

நாளை (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு காதல் படங்கள் ரிலீஸ் மற்றும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன.

அந்த வரிசையில் நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்த "உயிருள்ளவரை உஷா" திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீரிலீஸ் ஆகி உள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு, டி. ராஜேந்தரே இசையமைத்திருந்தார்.

அதுபோல கவுதம் மேனன் இயக்கிய மாதவனின் மின்னலே, அமீர் இயக்கிய சூர்யாவின் மௌனம் பேசியதே படங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி உள்ளன.

நாளை (பிப்ரவரி 14) தமிழ் சினிமாவின் கிளாசிக் காதல் படமான காதலர் தினம் படமும் ரீ ரிலீஸ் ஆகிறது.

அதேபோல அஜித்தின் வீரம், சிம்புவின் சிலம்பாட்டம் படங்களும் ரீ ரிலீஸில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

புதிய வெளியீடாக வித் லவ் படம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. மேலும் மயிலாஞ்சி, விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் பூக்கி ஆகிய காதல் படங்களும் இன்று ரிலீஸ் ஆகி உள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com