என் மலர்
நீங்கள் தேடியது "Re Release"
- இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
- சமந்தாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம்.
நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இதில் வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் கலக்கியது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் சமந்தாவிற்கு நல்ல திருப்புமுனையாகவும் அமைந்தது.
அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி படத்தின் ரீ-எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
அதன்படி, தமிழில் நாளை (நவ. 14) ஏழு திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.
காந்தா:
துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கும்கி 2:
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. 'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதராஸ் மாஃபியா கம்பெனி:
அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'மதராஸ் மாஃபியா கம்பெனி'. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.
ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.
படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிணறு:
இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிணறு'. இப்படத்தில், விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது.
தாவூத்:
இயக்குவர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தாவூத். ஒரு தமிழ் நகைச்சுவை-குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் லிங்கா, சாரா ஆச்சார், ராதா ரவி, ஷா ரா, சாய் தீனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாய்: ஸ்லீப்பர் செல்:
கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் 'பாய் ஸ்லீப்பர் செல்ஸ்'. கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.
சூதாட்டம்:
இயக்குனர் சரவணன் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூதாட்டம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா மற்றும் சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆட்டோகிராஃப்:
கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இப்படம் 21 ஆண்டுகள் கழித்து நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது.
- ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
- மனிதன் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார். இப்படத்தில் சோ, வினு சக்கரவர்த்தி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். மனிதன் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகின.
இந்நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் மனிதன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர்.
மனிதன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆவதால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- சுந்தரா டிராவல்ஸ் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது
- இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது
இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.
முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் வரும் 8ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் இப்படம் ரீ-ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால இப்படம் அப்போது வெளியாகவில்லை. இப்போது புதுப்பொலிவுடன் இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.
ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' படம் ரீ ரிலிஸ் செய்ய உள்ளது.
- 2005-ம் ஆண்டில் விஜய், அசின் நடிப்பில் வெளியான சிவகாசி ஆகிய படங்கள் ரீ ரிலிஸ் செய்ய உள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மற்றும் 2005-ம் ஆண்டில் விஜய், அசின் நடிப்பில் வெளியான சிவகாசி ஆகிய படங்கள் ரீ ரிலிஸ் செய்ய உள்ளதாக படத்தில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
இவர் தயாரிப்பில் கடந்த ஆண்டு ரீ ரிலிஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த தமிழ்நாட்டின் முதல் படம் என்ற சாதனையை கில்லி படைத்தது. இந்திய அளவில் 2-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
- 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.
இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.
முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளார்கள். மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, விஷால், சசிகுமார், சுந்தர் சி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'ஹிட்' படங்களை ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பும் வசூலிலும் சாதனையும் பெறுகிறது.
அதேபோல் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, விஷால், சசிகுமார், சுந்தர் சி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண்குமார் உள்ளிட்டோரின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஓரளவு வசூல் தான் கிடைத்துள்ளது. இதனால் தமிழ் சினிமா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'ஹிட்' படங்களை ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் அண்ணாமலை, யாரடி நீ மோகினி, வாரணம் ஆயிரம், பில்லா, திருமலை, வாலி, பிரேமம், காதலுக்கு மரியாதை, சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட திரைப்படங்கள் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய படங்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- இந்நிலையில் தற்போது ‘அஞ்சான்' திரைப்படம் 'ரீ எடிட்' செய்யப்பட்டு உள்ளது
- விரைவில் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து உள்ளார்.
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர் லிங்குசாமி .இவர் 2001-ம் ஆண்டில் 'ஆனந்தம்' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபல இயக்குனரானார். மேலும் 'திருப்பதி புரொடக்ஷன்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பிரபல நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து 2014- ம் ஆண்டில் வெளிவந்த படம் அஞ்சான் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கினார். 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் சார்பில் லிங்குசாமி இதனை தயாரித்தார்.

சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் நடித்தனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார்.இந்த படம் 2014 ஆகஸ்ட் 15- ல் வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது 'அஞ்சான்' திரைப்படம் 'ரீ எடிட்' செய்யப்பட்டு உள்ளது. விரைவில் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது.
- இந்த ஆண்டோடு வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைகிறது.
தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் இந்த படத்தில் கபடி வீரராக நடித்து இருப்பார். மதுரையில் கபடி போட்டிக்கு செல்லும் போது திரிஷாவை பிரச்சனையில் இருந்து காப்பாற்றி சென்னைக்கு தன்னுடன் அழைத்து வருகிறார். பின் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டிலே பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? என்பதே கில்லி படத்தின் கதைக்களமாகும்.
மக்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் கில்லி. படத்தின் நகைச்சுவை காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இடம்பெற்றிருக்கும், வெள்ளி அண்டா நகைச்சுவை காட்சி, நான் தான் ஓட்டேரி நரி பேசுறேன், என்ற நகைச்சுவை காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டுகளாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.
விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. படத்தின் பாடல்களைப் பற்றி கூறியே ஆகவேண்டும் . வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜூனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.
ஏப்ரல் 14 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம். இந்த ஆண்டோடு வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் வேளியாகி இந்தாண்டோடு 20 வருடங்கள் கடந்த நிலையில் படம் இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.
- சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகள் முழுவதும் கில்லி திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் இந்த படத்தில் கபடி வீரராக நடித்து இருப்பார். மதுரையில் கபடி போட்டிக்கு செல்லும் போது திரிஷாவை பிரச்சனையில் இருந்து காப்பாற்றி சென்னைக்கு தன்னுடன் அழைத்து வருகிறார். பின் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டிலே பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? என்பதே கில்லி படத்தின் கதைக்களமாகும்.
விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. படத்தின் பாடல்களைப் பற்றி கூறியே ஆகவேண்டும் . வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜூனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.
படம் வேளியாகி இந்தாண்டோடு 20 வருடங்கள் கடந்த நிலையில் படம் இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகள் முழுவதும் கில்லி திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு சென்று படத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் பலப்பேர் கில்லி திரைப்படத்தை முதன் முதலில் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் கில்லி படத்தின் காட்சிகளும், தியேட்டரின் ரெஸ்பான்ஸ்களையும், பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ரீ ரிலிஸ் செய்த படத்தில் கில்லி திரைப்படத்திற்கே அதிக அளவில் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
இதைக்குறித்து திரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ததற்கு நன்றி. 20 வருடங்களுக்கு முன் எப்படி உணர்ந்தேனோ அதை மீண்டும் உணர்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில் அஜித் பிறந்த நாள் மே 1- ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- அன்றைய தினம் ‘பில்லா’ படம் தியேட்டர்களில் 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது "ரீ-ரிலீஸ்" படங்கள் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு', '3', 'விண்ணைத் தாண்டி வருவாயா' ,விஜய் நடித்த 'கில்லி' உள்ளிட்ட படங்கள் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடி வருகின்றன.
பிரபல நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்த படம் பில்லா. இப்படத்தில் நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் நடித்துள்ளனர். இயக்குனர் விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்கினார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 2008 - ம் ஆண்டு 'பில்லா' படம் வெளியானது. இப்படம் 1980 -ல் ரஜினி நடித்த 'பில்லா' படத்தின் 'ரீமேக்' ஆகும்.
இந்நிலையில் அஜித் பிறந்த நாள் மே 1- ந் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் 'பில்லா' படம் தியேட்டர்களில் 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.

ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் - டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1- ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பில் 150 தியேட்டர்களில் இப் படத்தை வெளியிடுகிறார்கள். இப்படம் மீண்டும் வெளியாக உள்ளதை யொட்டி அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் பிறந்த நாள் விழாவை மே 1- ந் தேதி அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
- அஜித் படங்கள் மீண்டும் "ரீ ரிலீஸ்" செய்யப்படுவதை யொட்டி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்யில் அஜித் குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.

இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் பதிப்பில் வருகிற மே 1 - ந்தேதி அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் அஜித்தின் பில்லா, மங்காத்தா படங்களும் 'ரீ ரிலீஸ்' ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் பிறந்த நாள் விழாவை மே 1- ந் தேதி அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.

அன்றைய தினம் தியேட்டர்களில் அஜித் படங்கள் மீண்டும் "ரீ ரிலீஸ்" செய்யப்படுவதை யொட்டி அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






