என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜனநாயகன் உடன் மோதும் மங்காத்தா?.. வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்
    X

    ஜனநாயகன் உடன் மோதும் மங்காத்தா?.. வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

    • ஏற்கனவே ஜனநாயகன் உடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோதுகிறது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே ஜனநாயகன் உடன் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்த பராசக்தி படம் மோதுகிறது.

    இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா 2011 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் stay tuned என தெரிவித்துள்ளது. இதனால் மங்காத்தா ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். எனவே குட் பேட் அக்லிக்கு பின் வறட்சியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே அஜித்தின் அட்டகாசம் படம் அண்மையில் ரீ ரிலீஸ் ஆனது. அதேபோல அமர்க்களம் படமும் பிப்ரவரியில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×