என் மலர்
நீங்கள் தேடியது "அமைதிப்படை"
சத்யராஜ், மணிவண்ணன் கூட்டணியில் 1994 ஆண்டு வெளியான படம் 'அமைதிப்படை'. இப்படத்தை இயக்கிய மணிவண்ணன் அதில் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார்.
மேலும், சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் ரஞ்சிதா, சுஜாதா, கஸ்தூரி, மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் அரசியல் நையாண்டி வசனங்கள், மேடை பேச்சை கடந்து எதார்த்த அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்த காட்டின.
எந்த காலத்திற்கும் பொருந்தும் அமைதிப்படை கிளாசிக் அந்தஸ்து பெற்றது. அண்மைக் காலமாக கிளாசிக் படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வரும் நிலையில் அமைதிப்படை திரைப்படம் 4K தரத்தில் மேபடுத்தப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன், இந்த படத்தை 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் மிக விரைவில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
உலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.
அந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது.
இதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், “கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, படை வீரர்களையும், போலீசாரையும் அனுப்பி ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்துள்ள நாடுகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,855 கோடி) செலுத்த வேண்டியது உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) செலுத்த வேண்டியது இருக்கிறது” என குறிப்பிட்டார். #UnitedNation #AntonioGuterres






